தண்டராம்பட்டு வட்டம்
தண்டராம்பட்டு வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தண்டராம்பட்டு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 3 உள்வட்டங்களும், 63 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
இது செங்கம் வட்டத்தில் இருந்து 2013 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
உள்வட்டங்கள்
- தண்டராம்பட்டு
- தானிப்பாடி
- பெருங்களத்தூர்
இவ்வட்டத்தில் தானிப்பாடி அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்டதாக உள்ளது.
சுமார் 15 கி.மீ தொலைவில் சாத்தனூர் அணை உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 179,553 ஆகும். அதில் 90,128 ஆண்களும், 89,425 பெண்களும் உள்ளனர். 41,852 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 66.83% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22506 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 920 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 41,937 மற்றும் 17,077 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.73% , இசுலாமியர்கள் 4.15%, கிறித்தவர்கள் 4.02%%, சமணர்கள் 0..01% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[3]