முதன்மை பட்டியைத் திறக்கவும்

கள்ளக்குறிச்சி வட்டம்

கள்ளக்குறிச்சி வட்டம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக கள்ளக்குறிச்சி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 93 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தியாகதுர்கம் பேரூராட்சி உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 466,136 ஆகும். அதில் 234,833 ஆண்களும், 231,303 பெண்களும் உள்ளனர். 113,192 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 74.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 70.85% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு,985 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 52948 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 913 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 156,105 மற்றும் 1,718 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.69%, இசுலாமியர்கள் 3.57%, கிறித்தவர்கள் 1.5%, சமணர்கள் 0..02% மற்றும் பிறர் 0.04% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்தொகு