சிவகங்கை வட்டம்

சிவகங்கை வட்டம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகங்கை நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் சிவகங்கை, மதகுப்பட்டி, ஒக்கூர், பெரியகோட்டை மற்றும் தமறாக்கி என 5 உள்வட்டங்களும், 67 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 288,674 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 142,979 ஆண்களும், 145,695 பெண்களும் உள்ளனர். 74,167 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 84% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.06% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,019 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30253 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 45,579 மற்றும் 63 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.69%, இசுலாமியர்கள் 2.69%, கிறித்தவர்கள் 7.48%% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர். [2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_வட்டம்&oldid=2713775" இலிருந்து மீள்விக்கப்பட்டது