கிணத்துக்கடவு வட்டம்

கிணத்துக்கடவு வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கிணத்துக்கடவு உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

வரலாறுதொகு

2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பழைய பொள்ளாச்சி வட்டமானது பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு வட்டம் என இரு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தைச் சேர்ந்த 11 உள்வட்டங்களிலிருந்து, வடசித்தூர் உள்வட்டம் (9 கிராமங்கள்), கிணத்துக்கடவு உள்வட்டம் (12 கிராமங்கள்), கோவில்பாளையம் உள்வட்டம் (14 கிராமங்கள்) ஆகிய மூன்று உள்வட்டங்கள் அடங்கிய கிணத்துக்கடவு வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிணத்துக்கடவு_வட்டம்&oldid=2613237" இருந்து மீள்விக்கப்பட்டது