ஆத்தூர் வட்டம்
ஆத்தூர் வட்டம் தமிழ் நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் ஆகும்.[3] ஆத்தூர் திண்டுக்கல் நகரிலிருந்து 22 கிமீ தூரத்தில் உள்ளது. இதன் கீழ் 22 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன.[4] இவ்வட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
ஆள்கூறு | 10°17′25″N 77°51′11″E / 10.2902°N 77.8531°E | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
வட்டம் | ஆத்தூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
நகராட்சி தலைவர் | |||||||
மக்கள் தொகை | 79,334 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 159,846 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 79,334 ஆண்களும், 80,512 பெண்களும் உள்ளனர். 41,975 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 67.4% l மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.86% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15051 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 918 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 34,919 மற்றும் 110 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.88%, இசுலாமியர்கள் 4.32%, கிறித்தவர்கள் 10.52% & பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[5]
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Revenue Division and Taluks of Dindigul District
- ↑ இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ Attur Taluka Population, Religion, Caste, Working Data Census 2011