பள்ளிப்பட்டு வட்டம்

பள்ளிப்பட்டு வட்டம் தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]

பள்ளிப்பட்டு வட்டம்
Pallipat
town
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
ஏற்றம்
154 m (505 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,650
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
631207
Telephone code(91)44 - 2784
வாகனப் பதிவுTN-20

தமிழ்நாடு - ஆந்திரப்பிரதேசம் எல்லையில் அமைந்த இந்த வட்டம் 5 உள்வட்டங்களும், 70 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2] இந்த வட்டத்தில் மிக பெரிய வருவாய் கிராமம் பொதட்டூர்பேட்டை ஆகும்.

இவ்வட்டத்தில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் உள்ளது. பிப்ரவரி 2020-இல் இவ்வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிய ஆர். கே. பேட்டை வட்டம் உருவாக்கப்பட்டது. [3][4][5]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 214,073 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 107,698 ஆண்களும், 106,375 பெண்களும் உள்ளனர். 49,317 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 71% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.58% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24133 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 909 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,058 மற்றும் 4,743 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.8% , இசுலாமியர்கள் 1.64% , கிறித்தவர்கள் 1.35% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிப்பட்டு_வட்டம்&oldid=3953854" இலிருந்து மீள்விக்கப்பட்டது