அணைக்கட்டு வட்டம்
அணைக்கட்டு வட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இப்புதிய வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது.[2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் அணைக்கட்டு ஊரில் இயங்குகிறது. மாவட்டத் தலைமையிட நகரமான வேலூருக்கு மேற்கே 17 கிமீ தொலைவில் அணைக்கட்டு வட்டம் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 632101 ஆகும்.
அணைக்கட்டு வட்டம், அணைக்கட்டு, உசூர், பள்ளிகொண்டா மற்றும் ஒடுகத்தூர் என நான்கு பிர்கா எனும் குறு வட்டங்களையும், 61 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[3]
இதன் வடக்கே காட்பாடி வட்டம், மேற்கே குடியாத்தம் வட்டம், கிழக்கே வேலூர் வட்டம் சூழ்ந்துள்ளது. இவ்வட்டத்தின் அருகமைந்த நகரங்கள் வேலூர், பள்ளிகொண்டா, ஆற்காடு ஆகும். அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம்
- ↑ 23 new taluks created in Tamil Nadu
- ↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்