அணைக்கட்டு (ஊர்)

அணைக்கட்டு (ஒலிப்பு) என்பது வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். அணைக்கட்டு வட்டம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஆகியவைகளின் நிர்வாகத் தலைமையிடம் அணைக்க்ட்டில் உள்ளது. அணைக்கட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

தொகு

மாவட்டத் தலைமையிடமான வேலூருக்கு மேற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் அணைக்கட்டு உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 632 101 ஆகும். அருகமைந்த நகரங்கள் பள்ளிகொண்டா, வேலூர், பேரணாம்பட்டு மற்றும் ஆற்காடு ஆகும். இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம் அணைக்கட்டு மற்றும் விரிஞ்சிபுரம் ஆகும்.[1][2]

கல்வி & வழிபாட்டுத் தலங்கள்

தொகு

இப்பகுதியில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகளும், சில நர்சரி தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.பள்ளிகொண்டா நகரில் ஸ்ரீ கிருஷ்ணாபொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இப்பகுதி தரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு புகழ் பெற்றது. மழை பெற கோவிலில் மகாபாரத கதை சொற்பொழிவு நடக்கும். இதை கேட்க சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வருவார்கள். வாரச் சந்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஊரின் பொதுவான இடத்தில் நடக்கும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணைக்கட்டு_(ஊர்)&oldid=4153284" இலிருந்து மீள்விக்கப்பட்டது