கும்பகோணம் வட்டம்

கும்பகோணம் வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கும்பகோணம் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் தேவனாஞ்சேரி, முருக்கங்குடி, நாச்சியார்கோயில், சோழன்மாளிகை மற்றும் கும்பகோணம் என 5 உள்வட்டங்களும், 124 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்

தொகு
  • இந்துக்கள் = 87.01%
  • இசுலாமியர்கள் = 8.06%
  • கிறித்தவர்கள் = 4.74%)
  • பிறர்= 0.09%

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகோணம்_வட்டம்&oldid=2761936" இலிருந்து மீள்விக்கப்பட்டது