நாச்சியார்கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

நாச்சியார்கோவில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் பழைய பெயர் திருநறையூர் ஆகும். இது திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் வைணவ நாச்சியார் கோவில் எனப்படும் திருநறையூர் நம்பி கோயில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை மிகவும் புகழ்பெற்றது.[2] இவ்வூரில் தயாரிக்கப்படும் நாச்சியார் கோயில் விளக்குகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

அமைவிடம்

தொகு

நாச்சியார்கோயில் கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பாதையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அருகமைந்த தொடருந்து நிலையங்கள்

தொகு

கல்வி நிலையங்கள்

தொகு
  • திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - 1
  • திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் - 3
  • புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி

மக்கள் தொகை பரம்பல்

தொகு

நாச்சியார்கோயில் சிற்றூரின் மொத்த மக்கள் தொகை 7,505 ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாச்சியார்கோயில்&oldid=3282176" இலிருந்து மீள்விக்கப்பட்டது