இந்திய புவிசார் குறியீடு
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.[1]
உலக வணிக அமைப்பின் (WTO) உறுப்புநாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003 இல் நடைமுறைக்கு வந்தது.[2][3] இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.[4]
இந்தியாவின் புவிசார் பொருட்கள்தொகு
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[5] பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன.[6] 195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57 ஆகும்.
புவிசார்குறியீடு பெற்ற தமிழக பொருட்கள்தொகு
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, மஞ்சள் மாவட்டம் என்று அழைக்கப்படும் ஈரோடு சேலம் மாம்பழம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடை பாய் ஆகியவை மற்றும் பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. (இப்பட்டியல் முழுமையானதல்ல. விடுபட்ட புவிசார் குறியீடு பொருட்களை பட்டியலில் இணைத்து பட்டியலை மேம்படுத்தலாம்)[7]
மேலும் பார்க்கதொகு
வெளி இணைப்புகள்தொகு
உசாத்துணைகள்தொகு
- ↑ http://www.dinamani.com/latest_news/2014/03/01/புவிசார்-குறீட்டால்-அல்வா-ம/article2084896.ece
- ↑ The Geographical Indications of Goods (Registration and Protection) ACT, 1999
- ↑ THE GEOGRAPHJCAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999
- ↑ The Protection of Geographical Indications in India: Issues and Challenges
- ↑ Introduction to Geographical Indications
- ↑ STATE WISE REGISTRATION DETAILS OF G.I APPLICATIONS 15th September, 2003 – Till Date
- ↑ Intellectual Property Office, Chennai
- ↑ "இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள புவிசார் குறியீடுகள்". பார்த்த நாள் ஏப்ரல் 05, 2013.
- ↑ கோவில்பட்டி கடலைமிட்டாய்; புவிசார் குறியீடு கிடைத்தது
- ↑ Tamil Nadu earns two more GI tags- Dindigul Locks and Kandangi sarees
- ↑ From Dindigul locks to Kandangi saris: Would GI tags revive an industry?
- ↑ புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்
- ↑ "நாச்சியார் கோயில் விளக்குக்கு புவிசார்குறியீடு". பார்த்த நாள் ஏப்ரல் 05, 2013.
- ↑ https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/mar/07/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3108746.html