பட்டுப் புடைவை

(பட்டு புடவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியப் பெண்களின் பாரம்பரிய உடைகளில் புடவை குறிப்பிடத்தக்கதாகும். பட்டுப் புடவை பெண்கள் விரும்பும் ஓர் உடையாகும்.

தமிழ்நாட்டில் பட்டுப்புடவை உற்பத்தி

தொகு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் இடங்களில் பட்டுப்புடவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பட்டு இழை தயாரிக்கும் முறை

தொகு

பட்டு என்பது பட்டு பூச்சியை கொன்று தயாரிப்பதாகும். இது முதன் முதலில் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னாளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. சீனாவில் இருந்து தயாரிக்கும் பட்டு சீனப்பட்டு எனப்படும். சில நேரங்களில் சீன கச்சாப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. முதலில் மால்பெரி இலைகளில் பட்டுப்புழுக்களை விட்டு வளர்க்கப்படுகிறது, அந்த புழு வளர்ந்து நிலையில் தன்னைச் சுற்றி ஒரு கூடு கட்டிக்கொள்ளும். இந்த கூட்டினை சூடுரில் இட்டபின்பு அதிலிருந்து வரும் இழைகளை சேகரித்து கச்சாப்பட்டு உருவாகிறது.

இந்திய பட்டுப்புடவைகள்

தொகு

பட்டுப் புடவைகளின் உற்பத்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை வடிவமைப்பு மற்றும் பாணியில் வேறுபடுகின்றன. பட்டு சரிகை மற்றும் வேலைப்பாடுகளில் மிகவும் பிரபலமான சேலைகள் காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பட்டு சேலைகள்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.

2.[1]

இவற்றையும் காண்க

தொகு
  1. http://articleshttp[தொடர்பிழந்த இணைப்பு]://blog.brijraj.com/the-story-of-kanchipuram-silk-sarees பரணிடப்பட்டது 2016-01-03 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுப்_புடைவை&oldid=3561599" இலிருந்து மீள்விக்கப்பட்டது