ஆரணிப் பட்டு

ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி)
(ஆரணி சேலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆரணிப் பட்டு சேலை (Arani sarees) என்பது இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஆரணி நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் சேலை ஆகும்.[1].இந்த பட்டுப்புடவைகளை ஆரணி நகரில் தயாரிக்கப்படுவதால் ஆரணியை, ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர்

ஆரணிப்பட்டு
குறிப்புபட்டு புடவைகள்
வகைகைத்தொழில்
இடம்ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது02.05.2008
பொருள்பட்டு
ஆரணியிலுள்ள ஒரு கைத்தறி

சேலை என்பது நான்கு கெஜம் முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்[2]. சாடி என்ற சமஸ்கிருத சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[3] தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது. ஆரணி சேலை புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[4]காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது.

ஆரணி பட்டு உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[4]


ஆரணி பட்டு வரலாறுதொகு

இந்த தொழில் அதிக அளவில் ஆரணி மற்றும் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளில் தழைத்தோங்கியது. வடமாதிமங்கலம் மற்றும் தேவிகாபுரம் போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளில் தறி நெசவு செய்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆரணியில் பட்டு நெசவு விஜயநகரப் பேரரசு காலத்தில் தொடங்கி ஜாகீர் ஆட்சி காலத்திலும் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும் வளர்ச்சி அடைந்தது. தம்பன்ன செட்டியார் என்பவர் அமைத்த பட்டு முற்க்காலையே முதல் ஆலையாக கருதப்படுகிறது. பின்னர் அச்சுக்கட்டும் தொழிலை கண்ணையா நாயுடு என்பவரும், பல வண்ணங்களில் சாயமிடும் முறையை வி. விஜயராகவா நாயுடு என்பவரும் கொண்டு வந்தனர். பின்னர் படிப்படியாக பட்டு உற்பத்தி நெசவாளர்களும், பட்டு உற்பத்தி விற்பனையாளர்களும் பெருகினர்.

ஆரணி பட்டுக் கைத்தறி குழுமம்தொகு

தமிழகத்தில் அசல் வெள்ளி ஜரிகை இழைகளை பயன்படுத்தி நெசவு செய்யும் கைத்தறி பட்டுச் சேலை குழுமங்களிலியே மிகப்பெரிய குழுமமாக ஆரணி இயங்கி வருகிறது. 35000க்கும் மேற்பட்ட பாரம்பரியமான நெசவு கலைஞர்களைக் கொண்டு ஆரணி இயங்கி வருகிறது [5]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.thehindubusinessline.com/on-campus/gi-can-protect-handicrafts-from-abuse/article4265569.ece
  2. "Kanchipuram Sari - Tamilnadu". Tamilnadu.com. 16 October 2012. 11 ஏப்ரல் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 நவம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Madisar Pudavai". Tamilnadu.com. 5 February 2013.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-02-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-07 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  5. ஆரணி பட்டு வரலாறு மற்றும் ஆரணி பட்டு கைத்தறி குழுமம்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணிப்_பட்டு&oldid=3542915" இருந்து மீள்விக்கப்பட்டது