பரோட்டா

(புரோட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரோட்டா அல்லது புரோட்டா (Parotta or Puratha) என்பது மைதாமாவால் செய்யப்படும் உணவாகும். இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், நேபாளம், பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. பராத்தா என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும்.[1] இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

Purotta
புரோட்டா & முட்டை மசாலா குருமா
வகைஉரொட்டி
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிதென்னிந்தியா and இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்மைதா, eggs, நெய் or oil

வகைகள்

தொகு
  • புரோட்டா
  • கொத்து புரோட்டா (முட்டை புரோட்டா)
  • வீச் புரோட்டா
  • முட்டை வீச் புரோட்டா
  • லாப்பா புரோட்டா
  • முட்டை லாப்பா புரோட்டா
  • சிக்கன் லாப்பா புரோட்டா
  • சில்லி புரோட்டா
  • கோதுமை புரோட்டா
  • பன் புரோட்டா (தடிமன் ரொட்டி)
  • விருதுநகர் எண்ணெய் புரோட்டா
  • தூத்துக்குடி பொறித்த புரோட்டா

உடன் பரிமாறுவை

தொகு
  1. சைவ குருமா (சால்னா)
  2. அசைவ குருமா (சால்னா)
  3. முட்டை குருமா
  4. கொத்து கறி

சிக்கல்கள்

தொகு

மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். அது மட்டுமல்ல, நீரிழிவு (சர்க்கரை) நோய் வர வாய்ப்புகள் அதிகம்.[சான்று தேவை] இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன.[2] புரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert". விகடன் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2017.
  2. "கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert". விகடன் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோட்டா&oldid=4052149" இலிருந்து மீள்விக்கப்பட்டது