முட்டைகள் உள்ள உணவு

egg is a nutrient food

பல்வேறு பெண் உயிரினங்களால் குறிப்பாக பறவைகள்ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றால் இடப்படும் முட்டைகளை, மனிதர்களும் அவர்களின் மூதாதையர்களும் பல மில்லியன் ஆண்டுகளாக உணவாக உட்கொண்டு வருகின்றனர். [1] குறிப்பாக கோழிகளின் முட்டைகள் பரவலாக பல்வேறு இனக்குழுக்களால் உணவுப்பொருளாக நுகரப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள் கிமு 1500 வாக்கில் உணவுக்காக கோழி முட்டைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். [2] வாத்து, காடை, கவுதாரி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்ற பிற பறவைகளின் முட்டைகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்களின் முட்டைகளையும் மக்கள் சாப்பிட்டு வந்தாலும் அவைகள் எண்ணிக்கையளவில் கோழிகளின் முட்டைகளை விட மிகக் குறைவு. உணவாக உட்கொள்ளும் மீன் முட்டைகள் ரோ அல்லது கேவியர் என்று அழைக்கப்படுகின்றன.

பர்மேசன் மற்றும் கிரீம் கொண்டு வறுத்த முட்டை மற்றும் கேரட்
முட்டை சான்விச்

கோழிகள் மற்றும் பிற முட்டையிடும் உயிரினங்கள் உலகம் முழுவதும் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன, மேலும் கோழி முட்டைகளின் உற்பத்தி ஒரு உலகளாவிய தொழிலாகும். 2009 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 6.4 பில்லியன் கோழிகளின் முட்டையிடும் மந்தையிலிருந்து 62.1 மில்லியன் மெட்ரிக் டன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [3] இதன் புரதத் தேவை மற்றும் எதிர்பார்ப்பில் பிராந்திய அளவில் பல்வேறு பிரச்சினைகளும் உள்ளது, அத்துடன் கோழிகளை முட்டைக்காகவே வளர்க்கும் வெகுஜன உற்பத்தி முறைகள் குறித்த விவாதங்களும் தற்போது உள்ளன. 2012 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம் கோழிகளை அடைக்கப்பட்ட கூண்டுகளில் முட்டைகளுக்காக வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது.

வரலாறு தொகு

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே பறவைகளின் முட்டைகள் மதிப்புமிக்க உணவுப்பொருட்களாக இருந்தன. வேட்டையாடும் சமூகங்கள் மற்றும் பறவைகள் வளர்க்கப்பட்ட சமீபத்திய கலாச்சாரங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தின.

 
பண்டைய எகிப்திய காணிக்கைகளின் சித்தரிப்புகள் மென்னாவின் கல்லறை, முட்டைகள் அடங்கிய கூடை உட்பட

கி.மு 7500 க்கு முன்னரே கோழி (காட்டுக்கோழி) அதன் முட்டைகளுக்காக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். அங்கிருந்து அவை கிமு 1500 வாக்கில் சுமேர் மற்றும் எகிப்துக்கு கொண்டு வரப்பட்டன, மேலும் காடை முட்டை அதிகளவில் ஆதிக்கம் செய்துவந்த கிரேக்கத்தில் கிமு 800 வாக்கில் வந்தன,[4] எகிப்தின் தெப்ஸில், கிமு 1420 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஹரேம்ஹாபின் கல்லறையில், நெருப்புக்கோழி முட்டைகள் மற்றும் பிற பெரிய முட்டைகள் அடங்கிய கூடைகளை ஒரு மனிதன் காணிக்கையாக எடுத்துச் செல்லும் சித்திரத்தைக் காட்டுகிறது. [5] பண்டைய ரோமில் பல முறைகளினால் முட்டைகள் பாதுகாக்கப்பட்டன.[6]

1878 ஆம் ஆண்டில் மிசூரியின் செயிண்ட லூயிசில் உள்ள நிறுவனமொன்று உலர்த்தும் செயல்முறையைப் பயன்படுத்தி முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முட்டையின் வெள்ளை நிறத்தை வெளிர்-பழுப்பு, உணவு போன்ற பொருளாக மாற்றத் தொடங்கியது.[7] இரண்டாம் உலகப் போரின் போது உலர்ந்த முட்டைகளின் உற்பத்தி கணிசமாக அதிகரித்தது. 1911 ஆம் ஆண்டில் பிரித்தானிய கொலம்பியாவைச் சேர்ந்த ஜோசப் கோய்ல் என்பவரால் முட்டை அட்டைப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. முட்டைகள் உடைவால் ஏற்படும் சர்ச்சைகளை தீர்க்க   முட்டை அட்டைப்பெட்டிகள் காகிதத்தால் செய்யப்பட்டன.[8]

வளர்ப்புக் கோழிகளாக வளர்க்கப்படும் ஆசிய காட்டுக் கோழிகள் இனப்பெருக்கக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு டஜன் முட்டைகளை இடுகின்றன என்றாலும், பல்லாயிர ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் திறன் கொண்ட வளர்ப்புக் கோழிகள் உலகெங்கும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வகைகள் தொகு

 
காடை முட்டைகள் (மேல் இடது), கோழி முட்டை (கீழ் இடது), மற்றும் நெருப்புக்கோழி முட்டை (வலது)
 
ஒரு கூடையில் சேகரிக்கப்பட்ட கோழி மற்றும் காடை முட்டைகள்

பறவைகளின் முட்டைகள் சமையலில் பயன்படுத்தப்படும் பல்துறை உணவுப் பொருட்களில் ஒன்றாகும். முட்டைகள் நவீன உணவுத்துறையின் முக்கிய இடத்தை பெறுகின்றன.[9] கோழி, வாத்து ஆகியவற்றின் முட்டைகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய முட்டைகளான காடை முட்டைகளும் உணவுகளில் எப்போதாவது சுவையான மூலப்பொருளாகச் சேர்க்கப்படுகின்றன. சீனா. இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற ஆசியாவின் பல பகுதிகளில் முட்டை ஒரு பொதுவான அன்றாட உணவாகும், ஆசிய முட்டை உற்பத்தி 2013 ஆம் ஆண்டில் உலகின் மொத்தத்தில் 59 சதவீதத்தை வழங்குகிறது. [10] மிகப் பெரிய முட்டையான நெருப்புக்கோழிகளின் முட்டைகள் ஆடம்பர உணவாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கடற்புறாவின் முட்டைகள் இங்கிலாந்திலும், ஸ்காண்டிநேவிய நாடுகளிலும், நோர்வேயிலும் சுவைக்காக பயன்படுத்தப்படுகின்றன.[11] கினிக்கோழிகளின் முட்டைகள் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.[12] பல நாடுகள் காட்டு பறவைகளின் முட்டைகள் சேகரிக்கப்படுவதை அல்லது விற்பனை செய்யப்படுவதை தடைசெய்யும் சட்டங்களால் காணப்படுகின்றன. இவை சிலசமயம் ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே முட்டைகளை சேகரிக்க அனுமதிக்கின்றன.[11]

உற்பத்தி தொகு

 
உலக கோழி முட்டை உற்பத்தி

2017 ஆம் ஆண்டில், கோழி முட்டைகளின் உலக உற்பத்தி 80.1 மில்லியன் தொன்களாக இருந்தது. மொத்த உற்பத்தியில் சீனாவில் 31.3 மில்லியனும், அமெரிக்காவில் 6.3 மில்லியனும்,   இந்தியாவில் 4.8 மில்லியனும், மெக்ஸிகோவில் 2.8 மில்லியனும், ஜப்பானில் 2.6 மில்லியனும், பிரேசில் மற்றும் ரஷ்யா தலா 2.5 மில்லியனுக்கு அதிகமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன.[13] பொதுவான பெரிய முட்டை தொழிற்சாலை வாரத்திற்கு ஒரு மில்லியன் டசன் முட்டைகளை உற்பத்தி செய்கிறது.[14] 2019 ஜனவரி மாதத்தில், அமெரிக்கா 9.41 பில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்தது.

ஊட்டச்சத்து தொகு

சமைக்கப்பட்ட 50 கிராம் நிறையுடைய நடுத்தர அல்லது பெரிய கோரி முட்டை சுமார் 70 கலோரிகளையும்  (290 கிலோ யூல்), 6 கிராம் புரதத்தையும் கொண்டுள்ளது.[15] மேலும் பிரதானமாக உயிர்ச்சத்து ஏ, ரைபோபிளோவின், பாந்தோனிக் அமிலம்,  உயிர்ச்சத்து பி 12, கோலின், பாஸ்ரஸ், துத்தநாகம், உயிர்ச்சத்து டி ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சமையல் முறைகள் முட்டைகளின் ஊட்டச்சத்து மதிப்புகளை பாதிக்கின்றன. மஞ்சள் கருவொன்று பரிந்துரைக்கபட்ட தினசரி உட்கொள்ளல் அளவில் மூன்றில் இரண்டு பங்கு 300 மி.கிராம் கொழுப்பை கொண்டுள்ளது. கோழிகள் உண்ணும் உணவு முட்டைகளின் ஊட்டச்சத்து தரத்தை பாதிக்கலாம். சமைத்த முட்டைகள் இலகுவாக செரிமானம் ஆகும்.[16]

மேற்கோள்கள் தொகு

  1. Kenneth F. Kiple, A Movable Feast: Ten Millennia of Food Globalization (2007), p. 22.
  2. Peters, Joris; Lebrasseur, Ophélie; Irving-Pease, Evan K. et al. (14 June 2022). "The biocultural origins and dispersal of domestic chickens". Proceedings of the National Academy of Sciences 119 (24): e2121978119. doi:10.1073/pnas.2121978119. பப்மெட்:35666876. Bibcode: 2022PNAS..11921978P. 
  3. Outlook for egg production பரணிடப்பட்டது 15 மார்ச்சு 2015 at the வந்தவழி இயந்திரம் WATT Ag Net – Watt Publishing Co
  4. McGee, Harold (2004). McGee on Food and Cooking. Hodder and Stoughton. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-340-83149-6. https://archive.org/details/mcgeeonfoodcooki0000mcge. 
  5. Brothwell, Don R.; Patricia Brothwell (1997). Food in Antiquity: A Survey of the Diet of Early Peoples. Johns Hopkins University Press. பக். 54–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-5740-9. 
  6. McGee, Harold (2004). McGee on Food and Cooking. Hodder and Stoughton. p. 70. ISBN 978-0-340-83149-6.
  7. Stadelman, William (1995). Egg Science and Technology. Haworth Press. pp. 221–223. ISBN 978-1-56022-854-7.
  8. ""The Coyle Egg-Safety Carton"". Archived from the original on 2008-09-15.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  9. Montagne, Prosper (2001). Larousse Gastronomique. Clarkson Potter. pp. 447–448. ISBN 978-0-609-60971-2.
  10. "Global Poultry Trends 2014: Rapid Growth in Asia's Egg Output". The Poultry Site. 6 May 2015. Archived from the original on 10 August 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
  11. 11.0 11.1 Roux, Michel; Martin Brigdale (2006). Eggs. Wiley. p. 8. ISBN 978-0-471-76913-2.
  12. Stadelman, William (1995). Egg Science and Technology. Haworth Press. p. 1. ISBN 978-1-56022-854-7.
  13. "FAOSTAT". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  14. Quito, Anne. "Target used 16,000 eggs to decorate a dinner party, in a grand display of design's wastefulness". Quartz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  15. "FoodData Central". fdc.nal.usda.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  16. "Digestibility of cooked and raw egg protein in humans as assessed by stable isotope techniques".
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டைகள்_உள்ள_உணவு&oldid=3871416" இலிருந்து மீள்விக்கப்பட்டது