நெட்டி மாலை

நெட்டி மாலை என்பது மாடுகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மாலை ஆகும். இது தைப்பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, சிறப்பு பூஜை செய்து அணிவிக்கும் மாலைகளில் ஒன்று.

உருவாக்கம் தொகு

பொங்கல் தினத்தில் மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டிமாலை தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த திப்பிராஜபுரத்தில் தயாரிக்கப்பட்டுவருகிறது. 100 குடும்பங்களுக்கு மேல் நெட்டி மாலை செய்து வருகின்றனர். இதற்கு தேவையான நெட்டிகோரைகளை திருவாரூர் மாவட்டம் மாவூர், கோவிலூர் மற்றும் தஞ்சை அருகே பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் ஏரிகளில் விளைந்துள்ள நெட்டிக்கோரைகளை கூட்டாக ஏலம் எடுத்து அவற்றை அறுவடை செய்துவந்து வெயிலில் உலர்த்தி பின்னர் மேல் தோலை நீக்கி தேவையான அளவுகளில் துண்டு துண்டுகளாக நறுக்கியும், மாலைக்கு தேவையான கருணை, கீழ்குஞ்சம், வில்லை என பல்வேறு வடிவங்களில் நறுக்கி பிரித்தெடுத்து பின்னர் கொதிக்கவைத்த வெந்நீரில் பல்வேறு வண்ண, வண்ண சாயங்களை கலந்து பிரித்தெடுத்த நெட்டிகளை சாயமேற்றி மீண்டும் வெயிலில் காயவைக்கின்றனர். பின்னர் தாழம்பூ நாரில் கோர்த்து மாலைகளாக்குகின்றனர். [1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  2. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=102287[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டி_மாலை&oldid=3713498" இலிருந்து மீள்விக்கப்பட்டது