பால்கோவா பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு உணவுப்பொருள்களில் முக்கியமான ஒன்று. பால்கோவா சீனி சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு வகையாக தயாரிக்கப்படுகிறது.[1][2]

பாலினை நீண்ட நேரம் காய்ச்சிய பின்னர் சர்க்கரை சேர்க்கும் போது உருவாகும் பாகு நிலையில் உள்ள இனிப்பு ஆகும். தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் சிறப்பு பெற்றதாகும் திருவில்லிப்புத்தூர் பால்கோவாவிற்கு பிரபலமான ஊர் ஆகும். பால் அல்வா என்பதும் பால்கோவா போன்று தயாரிக்கப்படும் மற்றோர் இனிப்பு ஆகும்.

தேவைப்படும் பொருட்கள்

தொகு

1கிலோ பால்கோவை செய்யத்தேவைப்படும் பொருட்கள்:

 • பால் - 7 லிட்டர்
 • சீனி - 750 கிராம்
 • நெய் - முக்கால் லிட்டர்

செய்முறை

தொகு
 • 8 டம்பளர் பாலை சுண்டக் காய்ச்ச வேண்டும்.
 • அடிக்கனமான அகண்ட வாணலியில் பாலை விட்டு நன்கு கிளறவும்.
 • 2 டம்பளர் அளவு பால் சுண்டிய பின்னர், பால் கொதி வர ஆரம்பித்தவுடன் சர்க்கரை கலந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
 • கட்டியாக மாறிய பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.
 • வெளிர் நிறமானவுடன் நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
 • சிறிது குளிர்ந்த பின்னர் பால்கோவா தயாராக இருக்கும்.
 • நன்கு திடப்பட்டவுடன் இறக்கிவைக்கவும், இறக்கும்பொழுது ஒரத்தில் நெய்யை விட்டால் இரண்டு வாரங்கள் கெடாமல் இருக்கும்.
 1. http://www.thehindu.com/features/magazine/in-search-of-srivilliputtur-palgova/article3554551.ece
 2. "பால்கோவா". arusuvai (in ஆங்கிலம்). 2006-11-03. Archived from the original on 2022-02-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கோவா&oldid=4017107" இலிருந்து மீள்விக்கப்பட்டது