ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா


ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரில் கிடைக்கும் ஒரு இனிப்புப் பலகாரம். இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் இவ்வூரின் பசுக்களின் பால் சுவைமிக்கதாக இருக்கலாம். [1]

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி

பால்கோவா இங்குள்ள கூட்டுறவு பால் பண்ணையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும்,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்புகள் தொகு

  1. "ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?". August 29, 2012.