உடன்குடி
உடன்குடி (ஆங்கிலம்:Udangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பனைத்தொழில் சிறந்து விளங்கும் உடன்குடி, கருப்பட்டி மற்றும் வெற்றிலைக்கு சிறப்பு வாய்ந்தது. உடன்குடிக்கு அருகில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் மற்றும் ஐந்துவீட்டு சுவாமி கோவில் உள்ளது.
உடன்குடி | |||||||
— பேரூராட்சி — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தூத்துக்குடி | ||||||
வட்டம் | திருச்செந்தூர் | ||||||
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||||
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||||
மக்களவைத் தொகுதி | உடன்குடி | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
19,738 (2011[update]) • 1,828/km2 (4,734/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 10.8 சதுர கிலோமீட்டர்கள் (4.2 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/udankudi |
அமைவிடம்
தொகுஉடன்குடிக்கு அருகில் அமைந்த ஊர்கள்;கிழக்கே குலசேகரபட்டினம் 5 கிமீ, மேற்கே சாத்தான்குளம் 14 கிமீ, வடக்கே திருச்செந்தூர் 15 கிமீ, தெற்கே உவரி 24 கிமீ.,
பேரூராட்சியின் அமைப்பு
தொகு10.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 119 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,673 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 19,738 ஆகும் [2][3][4]
பெயர்க்காரணம்
தொகுஉடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. இங்கு இந்து,முஸ்லிம்,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையிலும் ஒற்றுமையுடனும் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்
சிறப்புகள்
தொகுதமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.