சாத்தான்குளம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (தாலுகா) வட்டம் .

சாத்தான்குளம் (ஆங்கிலம்:Sathankulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இது சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சாத்தான்குளம் வட்டம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமாகும். சாத்தான்குளம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

சாத்தான்குளம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் சாத்தான்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

22,205 (2011)

4,230/km2 (10,956/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.25 சதுர கிலோமீட்டர்கள் (2.03 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sathankulam

அமைவிடம்

தொகு

மாவட்டத் தலைமையிட நகரமான தூத்துக்குடியிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் , நாகர்கோவிலில் இருந்து 72கி.மீ தொலைவிலும் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. , இதன் அருகே உள்ள ஊர்கள்: கிழக்கில் 14 கிமீ தொலைவில் உடன்குடி, வடக்கில் 13 கிமீ தொலைவில் நாசரெத், மேற்கே 39 கிமீ தொலைவில் வள்ளியூர் தெற்கே 10 கிமீ தொலைவில் தட்டார்மடம், 23 கிமீ தொலைவில் திருச்செந்தூர் உள்ளது. 13 கிமீ தொலைவில் திசையன்விளை உள்ளது .அருகமைந்த தொடருந்து நிலையம் நாசரெத் ஆகும்.

பேரூராட்சி விவரம்

தொகு

5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,607 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 22,025 ஆகும்.[5][6]

ஊர் பெயர்க்காரணம்

தொகு

சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். இங்கு. சாத்தான் சம்புவரையர் என்கின்ற ஜமீன் இங்கு‌ ஆட்சி புரிந்தார் இவர் ஆட்சி புரிந்த காலத்தில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது ஆகையால் சாத்தான் சம்புவரையர் தனது சகோதரர்கள் சகோதரிகள் பெயர்களில் குளங்களை வெட்டினார் ஆகையால் மரிக்கொழுந்த நல்லூர் என்கின்ற பெயரை மாற்றி சாத்தான்குளம் என்கின்ற பெயர் வந்தது

தொழில் மற்றும் சமூகம்

தொகு

தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி இனத்தவரும், பல்தொழில் செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி, மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. சாத்தான்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. சாத்தான்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Sathankulam Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தான்குளம்&oldid=4170570" இலிருந்து மீள்விக்கப்பட்டது