சின்னாளப்பட்டி சுங்குடி சேலை

சின்னாளப்பட்டி சுங்குடி சேலை என்பது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சேலை ரகமாகும்.[1] பிரபலமாக சின்னல பட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வூரில் சுங்குடி புடவைகள் பாரம்பரிய வழியில் செய்யப்படுகின்றன.

தென்னிந்தியாவில் சின்னாளப்பட்டு புடவைகள் நன்கு அறியப்பட்டவையாக உள்ளன.

தற்பொழுது சேலை பயன்பாடு குறைத்து இருப்பதால், சின்னாளப்பட்டி நெசவாளர்கள் சுங்குடி சுடிதர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வகைகள்

தொகு
  • சிங்கிள்,
  • டபுள்கலர்,
  • முடிச்சு,
  • கல்கட்டா,
  • கைபுட்டா

என பல்வேறு வகைகளில் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.

தயாரிப்பு

தொகு

வெள்ளை நிற சேலைகளாக பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. இந்த வெள்ளை நிற சேலைகளில் மெழுகை நன்கு காய்ச்சி நூற்றுக்கும் மேற்பட்ட வித விதமான கட்டையச்சுகளை பயன்படுத்தி பல்வேறு வடிவங்களை அச்சடித்து தயார் செய்கின்றனர். பின்னர் மெழுகுச்சு வேலை முடிந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட வண்ண வண்ணமான அச்சுக்களை பதிக்கின்றனர்.

இவ்வாறு அச்சடிக்கப்படும் சுங்குடி சேலைகளில், அச்சு வேலை முடிந்த பின்பு, ஜவ்வரிசியை கொண்டு நன்கு காய்ச்சிய கஞ்சியை சேலையில் முழுவதுமாக நனைத்து உலர காய வைக்கின்றனர்.

ஆதாரங்கள்

தொகு
  1. "என்றும் மவுசு குறையாத சின்னாளபட்டி சுங்குடி சேலைகள்: இளைய தலைமுறையினரையும் கவரும் டிசைன்களால் தொழில் வளர்ச்சி". Hindu Tamil Thisai. 26 அக்., 2020. {{cite web}}: Check date values in: |date= (help)