உள்ளாடை
உள்ளாடைகள் (Undergarments, underwear) தோலினை அடுத்து மற்ற ஆடைகளுக்கு உள்ளே அணியப்படும் உடைகளாகும். உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை மற்றும் பிற கசிவுகளிலிருந்து வெளியே அணியும் ஆடைகளை பாதுகாப்பதுடன் உடலை வடிவாக காட்டவும் சில உறுப்புகளுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுகிறது. குளிர் காலங்களில் நீளமான உள்ளாடைகள் கூடுதலான கதகதப்பைத் தருகின்றன. சில உள்ளாடைகள் கவர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. சமயக் கோட்பாடுகளுக்கிணங்கவும் சில உள்ளாடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிலவகை ஆடைகள், டீ-சட்டைகள், குறுங்காற் சட்டைகள் போன்றவை, உள்ளாடைகளாகவும் வெளியாடைகளாகவும் பயன்படுகின்றன. பொருத்தமானத் துணியில் இருந்தால் சில உள்ளாடைகளை இரவுநேர ஆடைகளாகவும் நீச்சல் ஆடைகளாகவும் பயன்படுத்தலாம்.


வகைகள்
தொகுஉள்ளாடைகள் அணியும் இடத்தை பொறுத்து பொதுவாக இருவகைப்படும். உடலின் மேற்பகுதியில் அணிவது; மற்றொன்று இடுப்புக்குக் கீழே அணிவது. சில உள்ளாடைகள் இரண்டையும் மூடியிருக்கும். ஆண்களும் பெண்களும் பலவகைப்பட்ட பாணிகளில் உள்ளாடைகளை அணிகின்றனர். பெண்கள் வழைமையாக பிரா எனப்படும் மார்கச்சைகளையும் பேன்டீசு எனப்படும் கீழாடைகளையும் அணிகின்றனர். டீ-சட்டைகள், கையில்லாச் சட்டைகள், பிகினி உள்ளாடைகள், ஜீ இசுட்ரிங் உள்ளாடைகளை இருபாலரும் அணிவதுண்டு.
ஆண்களின் உள்ளாடைகள்
தொகுஆண்கள் பிரீஃப் எனப்படும் பாணி கீழாடைகளையும் பாக்சர் எனப்படும் பாணி கீழாடைகளையும் அணிகின்றனர். சிலர் கோவணம் எனப்படும் துணியையும் அணிகின்றனர். மேல்புறத்தில் பனியன் (கை வைத்தும் இல்லாதும்) அணிகின்றனர்.
பெண்களின் உள்ளாடைகள்
தொகுபெண்கள் வழைமையாக பிரா எனப்படும் மார்கச்சைகளையும் பேன்டீசு எனப்படும் கீழாடைகளையும் அணிகின்றனர்.
மேலும் அறிய
தொகு- Cunnington, C[ecil] Willett (1992). The History of Underclothes. New York, N.Y.: Dover Publications. ISBN 0-486-27124-2 (pbk.).
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help); Unknown parameter|coauthors=
ignored (help) First published in London by Michael Joseph in 1951. - Hawthorne, Rosemary (1993). Stockings & Suspenders: A Quick Flash. London: Souvenir. ISBN 0-285-63143-8.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Martin, Richard [Harrison] (1993). Infra-apparel. New York, N.Y.: Metropolitan Museum of Art. ISBN 0-87099-676-2 (pbk.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-6430-9.
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help); Unknown parameter|coauthors=
ignored (help)