சோழவந்தான்

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சோழவந்தான் (Cholavandan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். 15.24 ச.கி.மீ. பரப்பு கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளும், 23,872 மக்கள்தொகையும் கொண்டது. சோழவந்தான் பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] இவ்வூரில் புகழ்பெற்ற சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

சோழவந்தான்
—  தேர்வு நிலை பேரூராட்சி  —
சோழவந்தான்
இருப்பிடம்: சோழவந்தான்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°01′22″N 77°57′48″E / 10.022716°N 77.963426°E / 10.022716; 77.963426
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி சோழவந்தான்
சட்டமன்ற உறுப்பினர்

இ. வெங்கடேசன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

23,872 (2011)

1,566/km2 (4,056/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15.24 சதுர கிலோமீட்டர்கள் (5.88 sq mi)

127 மீட்டர்கள் (417 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sholavandan

பொருளாதாரம் தொகு

இது வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.

பெயர் வரலாறு தொகு

பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்ட இவ்வூர் சோழவந்தான் என தற்போது அழைக்கப்படுகிறது. சோழாந்தகன் என்பது வீரபாண்டியனின் சிறப்புப் பெயர்.ஜெனகை பெருமாள் கோயிலில் இக்கல்வெட்டை இன்றும் காணலாம். இராஜராஜசோழன் இவ்வூர் பெயரை ஜனநாத சதுர்வேதி மங்கலம் என மாற்றினர். இதன் சுருக்கப்பெயர் கொண்டே ஜனகை நாராயணர் கோயிலும், ஜனகை மாரியம்மன் கோயிலும் அழைக்கப்படுகின்றன.

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°01′22″N 77°57′48″E / 10.022716°N 77.963426°E / 10.022716; 77.963426 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,578 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11,168 ஆண்கள், 11,410 பெண்கள் ஆவார்கள். சோழவந்தானில் 1000 ஆண்களுக்கு 1022 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகமானது. சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 82.41% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88.98%, பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 2,213 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1030 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு மிக அதிகமானதாக உள்ளது.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 93.54% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 4.53% கிருஸ்துவர்கள் 1.64%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சோழவந்தான் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 14.84%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். சோழவந்தானில் 5,936 வீடுகள் உள்ளன.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-02-06 அன்று பார்க்கப்பட்டது.
  5. சோழவந்தான் பேரூராட்சி
  6. "Cholavandan". Falling Rain Genomics, Inc. பெப்ரவரி 6, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  7. Sholavandan Population Census 2011 பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015

வெளி இணைப்பு தொகு

விக்கி மேப்பியாவில் சோழவந்தான் அமைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழவந்தான்&oldid=3757738" இருந்து மீள்விக்கப்பட்டது