தேனி மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தேனி மக்களவைத் தொகுதி (Theni Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 33வது தொகுதி ஆகும்.

தேனி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தேனி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,074,931[1]
சட்டமன்றத் தொகுதிகள்190. சோழவந்தான் (தனி)
197. உசிலம்பட்டி
198. ஆண்டிப்பட்டி
199. பெரியகுளம் (தனி)
200. போடிநாயக்கனூர்
201. கம்பம்

தொகுதி மறுசீரமைப்பு தொகு

2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி தொகுதி மறுசீரமைப்பில், தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. பெரியகுளம் மக்களவைத் தொகுதி என்பது தேனி (சட்டமன்றத் தொகுதி), பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி), கம்பம் (சட்டமன்றத் தொகுதி), போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 5 தேனி மாவட்டத்துத் தொகுதிகளையும், சேடப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) எனும் மதுரை மாவட்டத் தொகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.

சட்டமன்ற தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

தொகுதி எண் தொகுதி ஒதுக்கீடு மாவட்டம்
195 சோழவந்தான் பட்டியலினத்தவர் மதுரை
197 உசிலம்பட்டி பொது மதுரை
198 ஆண்டிப்பட்டி பொது தேனி
199 பெரியகுளம் பட்டியலினத்தவர் தேனி
200 போடிநாயக்கனூர் பொது தேனி
201 கம்பம் பொது தேனி

மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் தொகு

வெற்றி வேட்பாளர் வாக்குவிகிதம்
2019
42.96%
2014
53.06%
2009
42.54%
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
2009 ஜே. எம். ஆரூண்ரஷீத் இந்திய தேசிய காங்கிரசு
2014 ஆர். பார்த்தீபன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 இரவீந்திரநாத் குமார்[2]

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019) தொகு

இத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த இரவீந்திரநாத் குமார், காங்கிரசு வேட்பாளரான ஈ. வெ. கி. ச. இளங்கோவன், 76,693 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
இரவீந்திரநாத் குமார்   அஇஅதிமுக 1,354 5,04,813 43.02%
ஈ. வெ. கி. ச. இளங்கோவன்   காங்கிரசு 2,335 4,28,120 36.48%
தங்க தமிழ்ச்செல்வன்   அமமுக 877 1,44,050 12.28%
ஷாகுல் ஹமீத்   நாம் தமிழர் கட்சி 426 27,864 2.37%
எஸ். இராதாகிருஷ்ணன்   மக்கள் நீதி மய்யம் 171 16,879 1.44%
நோட்டா - - 133 10,686 0.91%

வாக்காளர் புள்ளி விவரம் தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு தொகு

2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல் (2014) தொகு

முக்கிய வேட்பாளர்கள் தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆர். பார்த்தீபன் அஇஅதிமுக 5,71,254
பொன். முத்துராமலிங்கம் திமுக 2,56,722
அழகுசுந்தரம் மதிமுக 1,34,362
ஜே. எம். ஆரூண்ரஷீத் காங்கிரசு 71,432

வாக்குப்பதிவு தொகு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] வித்தியாசம்
74.48% 75.02% 0.54%

15வது மக்களவைத் தேர்தல் (2009) தொகு

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ஆரூண் ரசீத், அஇஅதிமுகவின் தங்க தமிழ்செல்வனை, 6,302 வாக்குகள் வேறுபாட்டில் வென்று, தேனி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஜே. எம். ஆரூண்ரஷீத் காங்கிரசு 3,40,575
தங்க தமிழ்ச்செல்வன் அஇஅதிமுக 3,34,273
சந்தானம் தேமுதிக 70,908
பார்வதி பாரதிய ஜனதா கட்சி 7,640
கவிதா பகுஜன் சமாஜ் கட்சி 8,023

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. http://www.elections.tn.gov.in/Reports/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf. பார்த்த நாள்: 29 செப்டம்பர் 2018. 
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. https://eci.gov.in/files/file/10277-general-election-to-the-17th-lok-sabha-2019-list-of-members-elected/. பார்த்த நாள்: 2 June 2019. 
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx. பார்த்த நாள்: ஏப்ரல் 30, 2014.