ஜே. எம். ஆரூண்ரஷீத்

ஜே. எம். ஆரூண்ரஷீத் ஆங்கிலம் J.M.HaroonRasheed இந்திய அரசியல்வாதி இவரது தந்தை பெயர் ஜமால் மொய்தீன். தாயார் பெயர் எஸ்.ஜே.எம்.எச். பீவி. பிறந்தது 1950ம் ஆண்டு. பிறந்த ஊர் சென்னை .

ஜே. எம். ஆரூண்ரஷீத்
தொகுதி தேனி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு மே 13, 1950 (1950-05-13) (அகவை 69)
சென்னை
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஹஸரன் பீவி
பிள்ளைகள் 2 மகன்கள், 2 மகள்கள்
இருப்பிடம் சென்னை

ஹஸரன் பீவி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராஜா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். அடிப்படையில் தொழிலதிபர்.


1996ம் ஆண்டு வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினராகவும் ,2004ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளார்.[1]

ஆதாரம்தொகு

  1. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=4064
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._எம்._ஆரூண்ரஷீத்&oldid=2628555" இருந்து மீள்விக்கப்பட்டது