தங்க தமிழ்ச்செல்வன்

தமிழக அரசியல்வாதி

தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் தமிழக அலசியல்வாதியும்,  சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு 2001- 2011, 2016 காலப்பகுதியில் மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்படவராவார். 2001 தேர்தலில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெ. ஜெயலலிதா போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு ஜெயலலிதா போட்டியட வசதியாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதன்பிறகு இவர் இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜ்ய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்ற பிறகு இவர் டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தியப் பொதுத் தேர்தல், 2019இல் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அமமுகவில் இருந்து விலகி 2019 சூன் 28 அன்று திமுகவில் இணைந்தார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்". செய்தி. ஒன் இந்தியா (2019 சூன் 29). பார்த்த நாள் 30 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_தமிழ்ச்செல்வன்&oldid=2879223" இருந்து மீள்விக்கப்பட்டது