ஈ. வெ. கி. ச. இளங்கோவன்

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (ஆங்கிலம்: E. V. K. S. Elangovan, பிறப்பு: திசம்பர் 12, 1948) ஒர் தமிழக அரசியல்வாதியும், தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். முந்தைய (2004–2009) காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முன்னாள் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சருமாக இருந்தார்.[1]தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களான குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.

ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர்
பதவியில்
2004 - 2009
முன்னவர் கே கே காளியப்பன்
தொகுதி கோபிச்செட்டிப்பாளையம்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
1984–1988
முன்னவர் டி. கே. சுப்ரமணியம்
பின்வந்தவர் ஆர். இரங்கசாமி
தொகுதி சத்யமங்கலம் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2023
முன்னவர் திருமகன் ஈவெரா
தொகுதி ஈரோடு கிழக்கு
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 21, 1948 (1948-12-21) (அகவை 74)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) வரலட்சுமி
பிள்ளைகள் திருமகன் ஈவெரா, சஞ்சய்
பெற்றோர் தந்தை : ஈ. வெ. கி. சம்பத்
தாயார் : ஈ. வெ. கி. சுலோசனாசம்பத்
இருப்பிடம் கோபிச்செட்டிப்பாளையம், தமிழ்நாடு, இந்தியா

இளமைக் காலம் தொகு

இவர் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.

குடும்பம் தொகு

இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்தார். இவரது மனைவி பெயர் வரலட்சுமி, இவர்களுக்கு 2 மகன்கள். இரண்டாவது மகன் திருமகன் ஈவெரா 2023 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அரசியல் வாழ்க்கை தொகு

போட்டியிட்ட தேர்தல்கள் தொகு

ஆண்டு தொகுதியின் பெயர் மக்களவை / சட்டமன்றம் முடிவு
1984 சத்யமங்கலம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்றம் வெற்றி
1989 பவானி சட்டமன்றத் தொகுதி சட்டமன்றம் தோல்வி
1996 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2004 கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி
2009 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2014 திருப்பூர் மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2019 தேனி மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்றம் வெற்றி

வகித்த பதவிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Elangovan,Shri E.V.K.S.". Lok Sabha. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=4062. பார்த்த நாள்: 2 May 2011. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._வெ._கி._ச._இளங்கோவன்&oldid=3778784" இருந்து மீள்விக்கப்பட்டது