திருப்பூர் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி
(கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பூர் மக்களவைத் தொகுதி (Tiruppur Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 18வது தொகுதி ஆகும். இத்தொகுதி 2009க்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.[1]

திருப்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருப்பூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்993,758
சட்டமன்றத் தொகுதிகள்103. பெருந்துறை
104. பவானி
105. அந்தியூர்
106. கோபிசெட்டிபாளையம்
113. திருப்பூர் வடக்கு
114. திருப்பூர் தெற்கு

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி திருப்பூர். ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டமன்றத் தொகுதியானது, இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என இரண்டாகியுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. பெருந்துறை
  2. பவானி
  3. அந்தியூர்
  4. கோபிசெட்டிபாளையம்
  5. திருப்பூர் வடக்கு
  6. திருப்பூர் தெற்கு

வென்றவர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 செ. சிவசாமி அதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 சத்தியபாமா அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 சுப்பராயன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி திமுக
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 சுப்பராயன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தொகு
தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தொகு
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.67% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 76.22% 1.55% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : திருப்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கம்யூனிஸ்டு கட்சி கே. சுப்பராயன் 472,739 41.38%  4.22
அஇஅதிமுக P. அருணாச்சலம் 346,811 30.35%  6.88
பா.ஜ.க ஏ. பி. முருகானந்தம் 185,322 16.22%
நாதக சீதாலட்சுமி 95,726 8.38%  4.60
நோட்டா பெயர் இல்லை 17,737 1.55%  0.41
வெற்றி விளிம்பு 125,928 11.02%  2.65
பதிவான வாக்குகள் 1,142,549
பதிவு செய்த வாக்காளர்கள்
கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம்

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே. சுப்பராயன், அதிமுக வேட்பாளரான, ஆனந்தனை 93,368 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கே. சுப்பராயன்   இந்திய கம்யூனிஸ்ட் 2,932 5,08,725 45.44%
ஆனந்தன்   அதிமுக 575 4,15,357 37.1%
சந்திரகுமார்   மக்கள் நீதி மய்யம் 119 64,657 5.78%
செல்வம்   அமமுக 50 43,816 3.91%
ஜெகநாதன்   நாம் தமிழர் கட்சி 110 42,189 3.77%
நோட்டா - - 79 21,861 1.95%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சத்தியபாமா அதிமுக 4,42,778
செந்தில்நாதன் திமுக 2,05,411
என். தினேஷ்குமார் தே.மு.தி.க 2,63,463
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் இதேகா 47,554

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

தொகு

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் சி. சிவசாமி, காங்கிரசின் கார்வேந்தனை 85,346 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருப்பூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
செ. சிவசாமி அதிமுக 2,95,731
கார்வேந்தன் காங்கிரசு 2,10,385
கே. பாலசுப்பரமணியன் கொமுபே 95,299
என். தினேசு குமார் தேமுதிக 86,933
எம். சிவகுமார் பாரதிய ஜனதா கட்சி 11,466

மேற்கோள்கள்

தொகு
  1. The constituency where waste is the biggest issue
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2009 மக்களவை தேர்தல் முடிவுகள்". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)