செ. சிவசாமி

இந்திய அரசியல்வாதி

செ. சிவசாமி (C. Sivasamy)(பிறப்பு 27 சூன் 1957) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியினைச் சார்ந்த இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

சிவசாமி, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[2] 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயனுக்கு எதிராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[3]

நாடாளுமமன்ற உறுப்பினர்

தொகு

சிவசாமி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திருப்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  2. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சிவசாமி&oldid=3943631" இலிருந்து மீள்விக்கப்பட்டது