கே. சுப்பராயன்

கே. சுப்பராயன் (K. Subbarayan, பிறப்பு: 10 ஆகத்து, 1947) ஓர் இந்திய அரசியல்வாதியும், 14 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச்  சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு  மக்களவைக்குச் சென்றவர். முன்னதாக இரண்டு முறை திருப்பூர் (சட்டமன்றத் தொகுதி)யில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே. சுப்பராயன்
பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2019 - தற்போது வரை
முன்னவர் சத்யபாமா
தொகுதி திருப்பூர்
பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004 - 2009
முன்னவர் சி. பி. இராதாகிருஷ்ணன்
பின்வந்தவர் பி. ஆர். நடராஜன்
தொகுதி கோயம்புத்தூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 ஆகத்து 1947 (1947-08-10) (அகவை 74)
திருப்பூர், தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஆர். மணிமேகலை
பிள்ளைகள் 1 மகன்
இருப்பிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு
As of 22 செப்டம்பர், 2006
Source: [1]

மக்களவை உறுப்பினராகதொகு

தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் 2004 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் உடன்பாடு கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தேர்தல் தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டின்படி இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி, கோயம்புத்துார் பாராளுமன்றத் தொகுதியில் சுப்பராயன் போட்டியிட்டார்.[1] இத்தொகுதி முதன்மையாக துணி நெசவுத் தொழில் சார்ந்த பொருளாதாரத்தைச் சார்ந்திருந்த காரணத்தால், முன்னதாக நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக பின்னடைவைச் சந்தித்திருந்ததால், 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சி. பி. இராதாகிருஷ்ணனால் வெற்றி கொள்ளப்பட்டிருந்தது. கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து நடந்த 2004 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் விளைவாக வெற்றி எளிதாக இருந்தது. முன்னதாக, கோவையில் இசுலாமிய அடிப்படைவாத அல் உம்மா அமைப்பால் நிகழ்த்தப்பட்டதாக கருதப்பட்ட மதக்கலவரங்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் குறித்த பிரச்சனை இத்தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக இல்லை.[2]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருப்பூர் தொகுதியிலிருந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

சட்டமன்ற உறுப்பினராகதொகு

சுப்பராயன் முன்னதாக திருப்பூர் (சட்டமன்றத் தொகுதி)யில் இருந்து இருமுறை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 1984-89 மற்றும் 1996-2001 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர் சுப்பராயனின் சொந்த ஊர் ஆகும். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) சி. கோவிந்தசாமியிடம் தோற்றுப்போனார்.[5]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 இல்[6] இவர் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்திருந்தார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சுப்பராயன்&oldid=3162593" இருந்து மீள்விக்கப்பட்டது