பி. ஆர். நடராஜன்

பி. ஆர். நடராஜன் (P. R. Natarajan)(பிறப்பு: டிசம்பர் 21, 1950) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 மற்றும் 2019[1][2] ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பி. ஆர். நடராஜன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2019 - பதவியில்
முன்னவர் பி. நாகராஜன்
தொகுதி கோயம்புத்தூர்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009-2014
முன்னவர் கே. சுப்பராயன்
பின்வந்தவர் பி. நாகராஜன்
தொகுதி கோயம்புத்தூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 திசம்பர் 1950 (1950-12-21) (அகவை 72)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இருப்பிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த இராமசுவாமி மற்றும் மங்களாம்பாள் தம்பதியினருக்கு 1950 டிசம்பர் 21 அன்று மகனாகப் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 1981-இல் வனஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பாலக்காடு ஐயர் சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._நடராஜன்&oldid=3786592" இருந்து மீள்விக்கப்பட்டது