கோ. போ. இராதாகிருஷ்ணன்

இந்திய அரசியல்வாதி

கோ. போ. இராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan)(பிறப்பு 1957) என்பவர் சி. பி. ஆர். என அறியப்படுபவர் ஆவார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டரும் ஆவார். இவர் 18 பிப்ரவரி 2023 அன்று ஜார்கண்ட் ஆளுநராக பதவியேற்றார்.

கோ. போ. இராதாகிருஷ்ணன்
ஜார்கண்ட் ஆளுநர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
18 பிப்ரவரி 2023
தலைவர், இந்திய கயிறு வாரியம், சிறு குறு தொழில் அமைச்சகம்[2]
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர், 2014
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1998–2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்மு. இராமநாதன்
பின்னவர்கே. சுப்பராயன்
தொகுதிகோயம்புத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 அக்டோபர் 1957 (1957-10-20) (அகவை 66)
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஆர். சுமதி
வாழிடம்திருப்பூர்
முன்னாள் கல்லூரிவ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி
வேலைவிவசாயம்

பாஜக தலைவராக

தொகு

இவர் பாஜ கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் ஆவார். இவர் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கவும் வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக கருதப்பட்டது. தற்போது இவர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார்.[3] இவர் 2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.[4] இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

மக்களவை தேர்தலில்

தொகு

இராதாகிருஷ்ணன் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[5] 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] இத்தேர்தல்களில் இராதாகிருஷ்ணன் 1998-ல் 150,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.[7]

2004 ல் திராவிட முன்னேற்றக் கழகம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முடிவுக்குக் வந்த பிறகு, கூட்டணி அமைப்பதில் பணியாற்றிய மாநிலத் தலைவர்களில் ஒருவர் இவர்.[8] இராதாகிருஷ்ணன் பின்னர் 2004 தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உறவுகளை ஏற்படுத்த மாநில கட்சியுடன் இணைந்து பணியாற்றினார்.[9]

2012ல், மேட்டுப்பாளையத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க தொண்டரைத் தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.[10]

இவர் தெற்கு மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க.வின் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். ஆர். எஸ். எஸ். மற்றும் ஜன சங்கத்துடன் 1973 முதல் தொடர்பில் உள்ளார். 2014-ல், இவர் கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாஜக வேட்பாளராகப் பெயரிடப்பட்டார். மேலும் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி இல்லாமல், இவர் 3,89,000 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றார். மீண்டும் கோயம்புத்தூரிலிருந்து 2019 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[11]

வகித்த பதவிகள்:[12]

தொகு
  • 1998-12வது மக்களவை உறுப்பினர்
  • 1998–99. உறுப்பினர், வணிகக் குழு மற்றும் அதன் துணைக் குழு
  • உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
  • உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்
  • 1999. 13வது மக்களவை உறுப்பினர் (2வது முறை)
  • 1999–2000. உறுப்பினர், வணிகக் குழு
  • உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
  • 2000– உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்
  • 2023 - ஜார்கண்ட் ஆளுநர்

போட்டியிட்ட தேர்தல்

தொகு
ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் வாக்குப் விகிதம் %
1998 12 வது மக்களவை பாரதிய ஜனதா கட்சி  கோயம்புத்தூர் வெற்றி 4,49,269
1999 13 வது மக்களவை பாரதிய ஜனதா கட்சி  கோயம்புத்தூர் வெற்றி 4,30,068
2004 14 வது மக்களவை பாரதிய ஜனதா கட்சி  கோயம்புத்தூர் இரண்டாம் இடம் 3,40,476
2014 16 வது மக்களவை பாரதிய ஜனதா கட்சி  கோயம்புத்தூர் இரண்டாம் இடம் 3,89,701 33.12
2019 17 வது மக்களவை பாரதிய ஜனதா கட்சி  கோயம்புத்தூர் இரண்டாம் இடம் 3,92,007 31.34

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. C P Radhakrishnan sworn in as 11th governor of Jharkhand
  2. "Railways may use coir wood to make train seats and berths | Coimbatore News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. "BJP reshuffles state office-bearers; Radha Mohan Singh in-charge of UP, Baijayant Panda of Delhi and Assam | India News".
  4. "Coirboard | :: COIR IS GREEN BUSINESS ::". coirboard.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-08-17.
  5. "Verdict not a surprise, says Radhakrishnan". தி இந்து (Coimbatore). 25 October 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/verdict-not-a-surprise-says-radhakrishnan/article1935922.ece. பார்த்த நாள்: 29 December 2013. 
  6. "BJP will have to start from scratch". தி இந்து (Coimbatore). 5 May 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/bjp-will-have-to-start-from-scratch/article3128814.ece. பார்த்த நாள்: 28 December 2013. 
  7. "Key Contests : CP Radhakrishnan vs K Subbarayan". Business Standard (Coimbatore). 1 May 2004. http://www.business-standard.com/article/economy-policy/key-contests-cp-radhakrishnan-vs-k-subbarayan-104050101072_1.html. பார்த்த நாள்: 8 January 2014. 
  8. "Vajpayee invites BJP leaders to Delhi for talks". தி இந்து (Chennai). 14 September 2003 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031027142032/http://www.hindu.com/2003/09/14/stories/2003091408180400.htm. பார்த்த நாள்: 8 January 2014. 
  9. "TN BJP invites AIADMK to return to NDA". டெக்கன் ஹெரால்டு (Chennai). 3 January 2004 இம் மூலத்தில் இருந்து 8 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140108142055/http://archive.deccanherald.com/Deccanherald/jan032004/n1.asp. பார்த்த நாள்: 8 January 2014. 
  10. "Normality returns to Mettupalayam". தி இந்து (Udhagamandalam). 9 November 2012. http://www.thehindu.com/news/national/tamil-nadu/normality-returns-to-mettupalayam/article4078605.ece. பார்த்த நாள்: 8 January 2014. 
  11. "Familiar faces to fight it out in Coimbatore". The Hindu. 22 March 2019. https://www.thehindu.com/news/cities/Coimbatore/familiar-faces-to-fight-it-out-in-coimbatore/article26613617.ece. பார்த்த நாள்: 24 March 2019. 
  12. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._போ._இராதாகிருஷ்ணன்&oldid=3943533" இலிருந்து மீள்விக்கப்பட்டது