அல் உம்மா

தீவிரவாத அமைப்பு

அல் உம்மா (Al Ummah) என்பது ஓர் தீவிரவாத இயக்கமாகும். அல் உம்மா என்பதற்கு சமுதாயம் என்று பொருள். இவ்வியக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டது. இது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.[1] இது 1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பை நடத்தியது.[2]

வரலாறு தொகு

அல் உம்மா இயக்கமானது பாபர் மசூதி இடிப்பு நிகழ்விற்குப் பின் சையது அஹமது பாட்ஷா மற்றும் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.[3] இவ்வியக்கத்தின் பெயரைத் தெரிவு செய்தவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆவார்.[சான்று தேவை] இவ்வியக்கத்திலிருந்து பிரிந்த இயக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகும்.[1] 1993 ஆம் ஆண்டில் சென்னையில் அமைந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தைச் சேர்ந்த பாட்ஷா மற்றும் இருவர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.[1] பின்னர் 1997 ஆம் ஆண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு அல் உம்மா இயக்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எல்.கே அத்வானியைக் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொலை செய்ய திட்டமிட்டனர்.[4] இத்திட்டத்தினால் கோவையில் 18 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர்.[5] விமானம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார். மேலும் அல் உம்மா இயக்கம் 2013 ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த தீவிரவாதக் குண்டு வெடிப்புச் செயலிலும் இவ்வியக்கம் தொடர்பு கொண்டிருந்தது.[6]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_உம்மா&oldid=3541785" இருந்து மீள்விக்கப்பட்டது