தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996
தமிழ்நாட்டின் பதினோறாவது சட்டமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1]
| |||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
|
தொகுதிகள்
தொகு1996 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
அரசியல் நிலவரம்
தொகு- 1991 தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலையால் மக்களிடையே ஏற்பட்ட அனுதாப அலையால் அதிமுக-காங்கிரசு கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அஇஅதிமுகவின் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரானார்.
- ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் விழுந்தது. காங்கிரஸ் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டது.
- முந்தைய தேர்தலில் இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வை. கோபால்சாமி (வைகோ) அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார்.
- பின்பு அவர் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.[3][4][5][6][7]
- 1991 முதலமைச்சர் ஆக பதவி ஏற்றவுடன் ஜெயலலிதா அவர்கள் அமல் படுத்திய முதல் திட்டம் கள்ள சாராயம் ஒழிப்பு.
- 1992 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் வழி வந்த அஇஅதிமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக கும்பகோணம் மகாமம் குளத்தில் ஆடம்பரமான இறை வழிபாடு செய்த போது அவரையும்,அவரின் தோழி சசிகலாவையும் காண வந்த மக்கள்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் இறந்து போனார்கள்.
- பின்பு மத்திய அரசாங்கம் கொண்டு வந்த 50% சதவீதம் இட ஒதுக்கீட்டை நீதிமன்ற தீர்ப்பால் அமல்படுத்திய போது தமிழகத்தில் பழைய 69% சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல் பழைய இட ஒதுக்கீடு முறையை பாதுகாத்ததால் முதல்வர் ஜெயலலிதா அவர்களை திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி அவர்கள் சமூக நீதி காத்த வீராங்கனை என்று பெயரிட்டார்.
- அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை பயன்படுத்தி கொண்டு அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அவரது தோழி சசிகலா பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செல்வாக்கு இழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது.
- ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின.
- அந்த திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் நகை வாங்கிய போது அதற்கு பணம் செலுத்தாததால் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் பாலு அவர்கள் மரணம் அடைந்த சம்பவங்கள் கலர் டிவி ஊழல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்த பல ஊழலை சுப்ரமணியசாமி அவர்கள் ஊழல் குற்றச்சாட்டினை வெளி கொண்டு வந்தார்.
- இந்த ஊழல் வழக்குகளை திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் தனி நீதிமன்றம் மூலமாக விசாரிக்க வழி செய்யபடும் என்று கூறினார்.
- இந்த தனி நீதிமன்றம் தீர்ப்பால் முதல்வர் ஜெயலலிதா உட்பட அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஊழல் வழக்கு அதிமுக கட்சி மீது இன்று வரை தீராத பழியாக இருந்து வருகிறது.
- கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த தமிழகத்தில் அதிகரித்து வந்த பெண் சிசு பலியை தடுக்கும் விதமாக தொட்டில் குழந்தை திட்டம் என்பதை கொண்டு வந்து பெண் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாத பெற்றோர்கள் அக்குழந்தையை தனது அதிமுக அரசே முறையாக வளர்க்கும் அமைப்பை இத்திட்டத்தின் மூலம் உருவாக்கினார்.
- கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தேறிய ஊழல் முறைகேடுகள், வரைமுறையற்ற அதிகாரம், அமைச்சர்களின் அராஜக முறைகேடு செயல்களால் தமிழக மக்கள் ஜெயலலிதா மீது மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
- நில அபகரிப்பு, பொது சொத்துக்களை கையக படுத்துதல், போன்ற முறைகேடான சம்பவங்கள், ஊராட்சி ஒன்றிய தலைமைக்கு வண்ண தொலைக்காட்சி வாங்கியவை போன்ற ஊழல்கள் அதிமுக ஆட்சியையும் ஜெயலலிதா மீது வழக்காக சுப்ரமணியசாமியால் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது
- இதனால் தமிழக மக்களிடையே அதிமுக ஆட்சி பலமான எதிர்ப்பு நிலையை உருவாக்கியதால். எதிர் கட்சியான திமுகவை வெற்றி பெற வைத்தனர்.
- இத்தேர்தல் நெருங்கும் வரை அதிமுகவிற்கு எதிர்கட்சியாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் அன்றைய இந்தியப் பிரதமருமான நரசிம்ம ராவ் அறிவித்தார்.
- அதற்கு காரணம் அக்காலகட்டத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்திற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி மற்றும் அக்கட்சியினர் அனைவரும் காரணமாக இருந்ததால். திமுக மீது காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் இருந்ததால் அக்கட்சியின் தலைவரும், இந்திய பிரதமருமான நரசிம்ம ராவ் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தார்.
- இதனால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்து அதிமுக–காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை பிளவுபட்டு ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரசு (தமாகா) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.[8][9]
- திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி உடன் சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சி, ஜனதா தளம், மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கோவை செழியனின் தமிழ் தேசிய கட்சி, பூவை.மூர்த்தியின் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஏழு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கி இருந்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது.
- பின்னர் பத்திரிக்கையாளர் சோ ராமசாமியின் சிபாரிசால் திமுக–தமாகா கூட்டணி அமைந்தது. நடிகர் ரஜினிகாந்த் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சன் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.
- திமுக மத்தியில் ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி இடம் பெற்று இருந்ததால். அந்த முன்னணி தலைமையில் திமுக உடன் தமாகா, சிபிஐ போன்ற கட்சிகள் ஒரே அணியில் இடம் பெற்று இருந்தனர்.
- மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 பேர் போட்டியிட்டனர். அரசாங்கம் தங்களுக்கு சரியான படி தண்ணீர் கிடைப்பதில் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் 1028 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் மற்ற தொகுதிகளோடு சேர்ந்து நடக்கவில்லை.[10]
கூட்டணிகள்
தொகு- இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியில் தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய லீக், பார்வார்டு ப்ளாக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும்,
- அதிமுக-காங்கிரஸ் ஓரணியாகவும்,
- பாட்டாளி மக்கள் கட்சி-திவாரி காங்கிரஸ் ஓரணியாகவும் போட்டியிட்டன.
- பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
- சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் க. கிருஷ்ணசாமி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.
- வைகோ அவர்களின் மதிமுக தலைமையிலான மக்கள் ஜனநாயக முன்னணியில் ஜனதா தளம், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. கூட்டணி தலைமை கட்சியான வைகோவின் மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தேர்தல் முடிவுகள்
தொகுதேர்தல் தேதி: மே 2, 1996; முடிவுகள் அறிவிப்பு: மே 12. மொத்தம் 66.95 % பதிவாகின.[11]
திமுக+ | இடங்கள் | அதிமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
திமுக | 167 | அதிமுக | 4 | பாமக | 4 |
தமாக | 39 | காங்கிரசு | 0 | மதிமுக | 0 |
சிபிஐ | 8 | ஜனதா தளம் | 1 | ||
இந்திய தேசிய லீக் | 5 | சிபிஎம் | 1 | ||
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | 1 | ஜனதா கட்சி | 1 | ||
பாஜக | 1 | ||||
சுயேட்சைகள் | 1 | ||||
மொத்தம் (1996) | 220 | மொத்தம் (1996) | 4 | மொத்தம் (1996) | 9 |
மொத்தம் (1991) | 4 | மொத்தம் (1991) | 224 | மொத்தம் (1991) | 9 |
குறிப்பு: இந்திய தேசிய லீக் கட்சியின் ஐந்து வேட்பாளர்களும், அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சியின் ஒரு பிரிவின் இரண்டு வேட்பாளர்களும் திமுகவின் “உதய சூரியன்” சின்னத்தின் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைப்பு
தொகுதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
விளைவுகள்
தொகு- கடந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து வெளியேறிய சு. திருநாவுக்கரசர் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து சென்று நடிகர் டி. ராஜேந்திரன் தலைமையில் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற தனி கட்சி தொடங்கினர். பின்பு அதில் இருந்து பிரிந்து எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று புதிய கட்சியை சு. திருநாவுக்கரசர் தொடங்கினார். பின்பு இத்தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்ட அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
- வைகோவின் மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மதிமுகவின் தலைமையிலான மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம் பெற்று இருந்த ஜனதா தளம், சிபிஎம் ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
- இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. பாமக தேர்தலில் தனித்து போட்டியிட்டது இதுவே கடைசி முறை. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் திமுக அல்லது அதிமுக கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்தது.
- திமுக-தமாகா கூட்டணி 1996 நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாடு-புதுச்சேரியில் அனைத்து (40) இடங்களை வென்றது.
- இதனால் மத்தியில் அமைந்த காங்கிரஸ் இல்லாத ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியில் இரு கட்சிகளும் இந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்தனர். ஐக்கிய முன்னணி கூட்டணியில் மத்தியில் இரு கட்சிகளும் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தமிழக சட்டமன்ற தேர்தல், 1996 வரலாறு
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Bhagat, Rasheeda (4 ஏப்ரல் 2001). "Advantage Jayalalitha?". பிசினஸ் லைன். http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm. பார்த்த நாள்: 2010-01-18.
- ↑ Panneerselvan, A. S. (28 May 2001). "JJ & Her Technicolor Cape". Outlook. http://www.outlookindia.com/article.aspx?211761. பார்த்த நாள்: 2010-01-18.
- ↑ Ram, Arun. (25 June 2001). "Fostering Ill-will". இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 2009-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090211121122/http://india-today.com/itoday/20010625/state-tn.shtml. பார்த்த நாள்: 2010-01-18.
- ↑ Subramanian, T. S. (14 August 1999). "Hurdles in Tamil Nadu". Frontline இம் மூலத்தில் இருந்து 2008-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080915160945/http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm. பார்த்த நாள்: 2010-01-18.
- ↑ Menon, Jaya (17 March 2007). "Vaiko’s MDMK formally snaps ties with UPA". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/. பார்த்த நாள்: 2010-01-18.
- ↑ Subramanian, T. S. (15 September 2001). "Crusading Congressman". Frontline இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107064055/http://www.hindu.com/fline/fl1617/16170180.htm.
- ↑ Palanithurai, Ganapathy (1998). Perception of grass root democracy and political performance. M.D. Publications. pp. 169–180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7533-068-9.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-03-09. பார்க்கப்பட்ட நாள் 2011-03-26.
- ↑ Tamil Nadu Election Results, Election Commission of India accessed ஏப்ரல் 19, 2009