திருநறையூர் நம்பி கோயில்

திருநறையூர் நம்பி கோயில் அல்லது சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில், தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோயில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் வைணவ திருநரையூர் நம்பி திருக்கோயில் எனும் சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.[2] சோழ நாட்டு பதினான்காவது திருத்தலமாகும். இக்கோவில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும். இக்கோயிலிலில் நடைபெறும் கல் கருடச் சேவை புகழ் பெற்றது.[3][4][5] நாச்சியார் கோவிலில் உள்ள திருநரையூர் நம்பி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை புகழ்பெற்றதாகும்.[1][6] இவ்வூரில் தயாரிக்கப்படும் நாச்சியார் கோயில் விளக்கு புகழ்பெற்றதாகும்.

திருநறையூர் நம்பி திருக்கோயில்
சீனிவாசப் பெருமாள் கோயில்
திருநறையூர் நம்பி திருக்கோயில் சீனிவாசப் பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
திருநறையூர் நம்பி திருக்கோயில் சீனிவாசப் பெருமாள் கோயில்
திருநறையூர் நம்பி திருக்கோயில்
சீனிவாசப் பெருமாள் கோயில்
ஆள்கூறுகள்:10°54′57″N 79°26′44″E / 10.9157°N 79.4456°E / 10.9157; 79.4456
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவு:நாச்சியார்கோயில்
ஏற்றம்:45.91 m (151 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:சிறிநிவாசப் பெருமாள்
தாயார்:வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்
சிறப்பு திருவிழாக்கள்:கல்கருட சேவை[1]
உற்சவர்:திருநரையூர் நம்பி, இடர்கடுத்த திருவாளன்
உற்சவர் தாயார்:வஞ்சுளவல்லி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

தல வரலாறு

தொகு
 
ராஜகோபுரம்

இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட வைணவ கோயில் ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கணான் சோழனால் கட்டப்பட்டது. இது ஒருமாடக்கோயில் (யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். இந்ததலத்தில் வஞ்சுளவல்லி தாயாருக்கே முதலிடம் எனவே நாச்சியார்கோயில் என அழைக்கப்பட்டது. மேதாவி என்னும் மகரிஷியின் தவப்பயனாய் வஞ்சுள மரத்தடியில் கிடைத்த குழந்தையே வஞ்சளவல்லி ஆவார். வஞ்சளவல்லி பருவகாலம் வந்தபோது எம்பெருமான் தன் ஐந்து அம்சமான சங்கர்ஷணன், ப்பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் ஐந்து உருவங்களாகி மகரிஷி குடிலுக்கு சென்று விருந்துண்டு கைக்கழுவும் போது நீர் கொடுத்த வஞ்சளவல்லி கைப்பிடிக்க கோபம் கொண்ட மகரிஷி சாபம் கொடுக்க இருந்த நேரத்தில் ஐவர் ஒருவராகி வஞ்சளவல்லியை கரம் பிடித்து மகரிஷியை ஏறிட்டு இரந்து நின்ற கோலத்தில் காட்சி தந்தார். இதே கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார்.

கல்கருட சேவை

தொகு
 
தூண் மண்டபம்

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது தூண் மண்டபம் உள்ளது. அதனை அடுத்து படிகளில் ஏறிச்சென்று மூலவர் கருவறையை அடையலாம். மூலவர் கருவறைக்கு இடது புறம் உள்ள நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 நாச்சியார் கோவிலில் கல்கருட சேவை
  2. Thiru Naraiyur Nambi Thirukovil, Nachiyar Kovil, Kumbakonam
  3. thirunaraiyur nimbi thirukovil
  4. Nachiyar Kovil Temple History, Info, Timings and Location
  5. "Nachiyar Kovil". Archived from the original on 2021-09-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  6. நாச்சியார்கோயிலில் கல் கருடச் சேவை

வெளி இணைப்புகள்

தொகு