நாச்சியார் கோயில் விளக்கு
நாச்சியார் விளக்கு (Nachiarkoil lamp) மேலும் அம்மன் விளக்கு அல்லது நாச்சியார் குத்துவிளக்கு என்றும் அழைக்கபடும் இது, பித்தளையைக் கொண்டு அகல் விளக்குகளை அடுக்கி உருவாக்கப்படும் ஒரு அலங்கார விளக்கு ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயில் நகரமான நாச்சியார்கோயில் என்ற ஊரில் கம்மாளர் (பத்தர்) சமூதத்தால் பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. [1] [2] வெற்று வார்ப்பாக இருக்கும் விளக்கு, வெவ்வேறு அளவுகளில் நான்கு பகுதிகளாகத் தயாரிக்கப்படுகிறது. பின்னர், அவை ஒன்றாகத் திருகப்படுகின்றன. அதன் உச்சியில் "பிரபை" என அழைக்கப்படும் மகுடம் போன்ற அமைப்பு பொருத்தப்படுகிறது. இது பொதுவாக அம்சப் பறவை அல்லது அன்னப்பறவை வடிவத்தில் இருக்கும். விளக்கு ஒரு மேலோட்டமான கிண்ணத்தை வைத்திருக்கும் பெண் உருவ வடிவத்திலோ அல்லது ஒரு மரக் கிளைகளின் வடிவத்திலோ செய்யப்படலாம். இந்த விளக்குகளின் கிண்ணத்தில் ஐந்து ஆங்கில வி-வடிவ அமைப்பு உள்ளன. அவற்றில் எண்ணெயால் நிரப்பி பருத்தித் திரிகளைக் கொண்டு விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறது. இவ்வகை அலங்கார விளக்குகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நாச்சியார் கோயில் விளக்கு | |
---|---|
நாச்சியார் கோயில் விளக்கின் மேல் பகுதி | |
வேறு பெயர்கள் | நாச்சியார் குத்துவிளக்கு, அன்னம் விளக்கு, கம்மாளர் விளக்கு |
குறிப்பு | கைவினைt (விளக்கு) |
வகை | பித்தளை |
இடம் | தமிழ்நாட்டின் நாச்சியார் கோயிலுள்ள கம்மாளர் தெரு |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 2010 பிப்ரவரி 8 |
பொருள் | பித்தளை |
புவிசார் குறியீடு
தொகுவர்த்தக தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் புவியியல் குறிப்பின் கீழ் இந்த தயாரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 8, 2010 அன்று இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் குறிப்புகள் சட்டம் 1999 இன் கீழ் "நாச்சியார்கோயில் குத்துவிளக்கு " என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. [2] நாச்சியார்கோயிலில் 'பூம்புகார்' என்ற பெயரில் மாணவக் கைவினைஞர்களின் ஒரு இரண்டு வருட பயிற்சித் திட்டம் ஒன்றை தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம் நடத்தி வருகிறது.
இடம்
தொகுதமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் நாச்சியர்கோயில் அமைந்துள்ளது. இந்த நகரம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 6 மைல் (9.7 கி.மீ) தூரத்தில் கும்பகோணம் - திருவாரூர் பிரதான சாலையில் உள்ளது. விளக்குகள் கம்மாளர் (பத்தர்கள்) எனப்படும் உள்ளூர் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன . [2]
வரலாறு
தொகுவிளக்குகள் முதலில் நாச்சியார்கோயில் என்ற ஊரில் பத்தர்கள் என அழைக்கப்படும் கம்மளர்கள் என்ற குறிப்பிட்ட சமூகத்தினரால் செய்யப்பட்டன. அவர்கள் பித்தளை மற்றும் பித்தளை அலாய் உலோகத்தால் செய்யப்பட்ட இந்த கலை வடிவத்தை முதலில் கேரளாவின் முந்தைய திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தில்]] நாகர்கோயிலில் பயின்று வந்தனர். இந்த கைவினைப்பொருளைக் கொண்டு அவர்கள் நாகர்கோயிலில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர முடியாததால், கம்மாளர்களின் ஐந்து குடும்பங்கள் ஆரம்பத்தில் கும்பகோணத்திற்கும் பின்னர் 1857 இல் நாச்சியார்கோயிலுக்கும் குடியேறின. கும்பகோணத்தில் உள்ளூர் கைவினைஞர்கள் இந்த தயாரிப்பை பித்தளைத் தாள்களைக் கொண்டு தயாரிப்பதைக் கண்டனர். கைவினைப்பொருட்களைத் தயாரிப்பதற்கு தாள்களைப் பயன்படுத்துவது பற்றி இவர்களுக்குத் தெரியாததால், இவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை மணலைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பித்தளை அலாய் நுட்பத்தைப் பயன்படுத்தி அதில் தங்கள் சொந்த கைவினைத்திறனை புகுத்தினர். அருகிலுள்ள காவிரி ஆற்றுப் படுக்கையில் கிடைக்கும் வெளிர் பழுப்பு மணல் பிரத்தியேகமானது என்றும் தங்களது தயாரிப்புகளை வடிவமைக்க மிகவும் பொருத்தமானது என்று இவர்கள் கண்டுபிடித்ததால் இவர்கள் நாச்சியார்கோயிலில் குடியேறினர். இந்த மணல் "வண்டல் மணல்" என்று அழைக்கப்படுகிறது. [2] நாட்சியார்கோவிலின் கம்மாளர் தெருவில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பத்தர்கள் (கம்மாளர்) என்று அழைக்கப்படும் உள்ளூர் கைவினைஞர்களால் இந்த விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் காண்க
தொகு- பிற விளக்குகள்
- தொடர்புடைய தலைப்புகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ PM Narendra Modi gifts Xi Jinping Annam lamp, Times of India, 11 october 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Geographical Indication Journal No. 47" (PDF). Ministry of Commerce and Industry, Government of India. 30 October 2012. Archived from the original (pdf) on 9 August 2013. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.