கம்மாளர்

கம்மாளர் (Kammalar) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடகிழக்கு பகுதியிலும் வாழும் ஒரு தமிழ் சாதியினர் ஆவார். இவர்கள் தச்சர், கொல்லர், கற்தச்சர், தட்டார், கன்னார் என ஐந்து தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர். இவர்கள் பூணூல் அணிகின்றனர். இந்த தொழிலை செய்யக்கூடிய தமிழைத்தவிர பிறமொழி பேசக்கூடியவர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்கள் தங்களை விஸ்வகர்மாலா விஷ்வபிராமின் என்றும் அழைத்துக்கொள்கின்றனர்.தமிழ்பேசுபவரும்,தெலுங்கை பேசுபவரும் உள்ளனர்.சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்களாக உள்ளனர்.மேலும் வட தமிழ்நாட்டில் ஆச்சாரி,தென் தமிழ்நாட்டில் ஆசாரி,விசுவகர்மா என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[1] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.

கம்மாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கம்சாலா, விஸ்வகர்மா,

இதையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்மாளர்&oldid=3374344" இருந்து மீள்விக்கப்பட்டது