பறக்கும் விளக்கு

கொங் மிங் விளக்கு (Kongming lantern) அல்லது பறக்கும் விளக்கு (Sky lantern) என்பது சீனா போன்ற ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை விளக்கு. இதுவே உலகில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் பலூன் என்றும் கூறலாம். இவ்விளக்குகள் எண்ணெய்காகிதம் என்று அழைக்கப்படும் மிக மெல்லிய காகிதத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.மேலும் மூங்கில் வளையம்,காயவைத்த தேங்காய் பருக்கும் காங் மிங் விளக்குகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.தேங்காய் பருக்கு அவ்விளக்கு பறப்பதற்கான எரிபொருளாக பயன்படுகிறது.சில நேரங்களில் தேங்காய் பருக்குவிற்கு பதிலாக வேறு சில பொருள்களையும் பயன்படுத்துவார்கள்.

தாய்லாந்தின் புத்த மதத் திருவிழா ஒன்றில் பறக்கும் விளக்குகள்

காங் மிங்' விளக்குகள் ஜ்ஹு கே லியாங் எனும் சீனப் பேரரசின் படைத்தளபதியால் கண்டுபிடிக்கப்பட்டன; கண்டுபிடிக்கப்பட்ட காலம் கிபி 3ம் நூற்றாண்டு என அறியப்படுகிறது. முதலில் இவ்விளக்குகள் போர் காலங்களில் தகவல்கள் அனுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.ஆபத்து நேரங்களில் சீன படைவீரர்கள் இவ்விளக்குகளை பறக்கவிடுவதன் மூலம் செய்திகளை பறிமாறியுள்ளனர். ஒவ்வொரு வகையான செய்திக்கும் தனித்தனியே நிறம் உண்டு.எனவே சீன வீரர்கள் அவர்கள் தெரிவிக்க வேண்டிய செய்திக்கு ஏற்றது நீறத்தை உடைய காங் மிங்விளக்குகளை பறக்கவிட்டு தங்கள் செய்திகளை பறிமாறியுள்ளனர்.[1][2][3]

தற்காலத்தில் காங் மிங் விளக்குகளின் பயன்பாடு என்பது முற்றும் மாறியுள்ளது. அது தற்பொழுது சீனர்களின் பண்பாட்டுச் சின்னமாகவும் பெருநாள் காலப்பொருளாகவும் கருதப்படுகிறது. காங் மிங் விளக்குகள் பயன்படுத்துவதன் மூலம் தீ விபத்து போன்ற நிகழ்வுகள் அதிகம் ஏற்படுவதால் சீன நாட்டில் உள்ள 'சண்யா' எனும் தீவில் காங் மிங் விளக்குகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கொங் மிங் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Joseph Needham (1965). Science and Civilisation in China: Volume 4, Physics and Physical Technology, Part 2, Mechanical Engineering; rpr. Taipei: Caves Books Ltd.
  2. Michael Burgan (2009). Empire of the Mongols. Facts on File. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438103181.
  3. Tikkanen, Amy. "Lantern Festival". Britannica. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_விளக்கு&oldid=4100617" இலிருந்து மீள்விக்கப்பட்டது