வெண்ணெய் விளக்கு

வெண்ணெய் விளக்குகள் (Butter lamps) என்பது இமயமலை முழுவதும் உள்ள திபெத்திய பௌத்தக் கோவில்களிலும், மடாலயங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். விளக்குகள் பாரம்பரியமாக தெளிவுபடுத்தப்பட்ட யாக் வெண்ணெயைக் கொண்டு எரிய வைக்கப்படுகின்றன. ஆனால் இப்போது பெரும்பாலும் தாவர எண்ணெய் அல்லது வனஸ்பதி நெய்யைப் பயன்படுத்துகின்றன.

ஒரு திபெத்திய வெண்ணெய் விளக்கு
வெண்ணெய் விளக்குகள் எரிகின்றன

வெண்ணெய் விளக்குகள் மனதை ஒருமுகப்படுத்தவும் தியானத்திற்கு உதவவும் செய்கிறது. இந்தியா மற்றும் திபெத் பகுதிகளில் சாக்த சமயத்தவர்கள் , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் மற்றும் சுவேதாம்பர சமண சமயத்தினர் கடைப்பிடிக்கும் தாந்திரீகத்தில் ஒருவர் " சிறந்த ஆன்மீக உணர்வை உணர விரும்பினால், நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றுங்கள்" எனக் குறிப்பிடுகிறது. [1]

பௌத்த யாத்ரீகர்கள் தங்களின் "தகுதி" நிலையை பெற விளக்கு எண்ணெயை வழங்குகிறார்கள். மடத்தில் உள்ள துறவிகள் விளக்குகளை பராமரிக்கிறார்கள், பல மடாலயங்களை சேதப்படுத்திய பேரழிவுகரமான தீவிபத்திலிருந்து தவிர்க்க தீவிர கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பிற்காக, வெண்ணெய் விளக்குகள் சில நேரங்களில் ஒரு கல் தளத்துடன் ஒரு தனி முற்றத்தில் வைக்கப்படுகின்றன.

வெளிப்புறமாக, விளக்குகள் இருளை விரட்டுகின்றன. கருத்தியல் ரீதியாக, அவை கற்பனைப் பொருளை வெளிச்சமாக மாற்றுகின்றன. இது அறிவொளியைத் தேடுவதற்கு ஒத்ததாகும். நாரோபாவின் ஆறு யோகங்களின் தம்மோ யோகா ஆற்றலின் வெப்பத்தை அவர்கள் நினைவுகூர்கின்றன. இது கக்யு, கெலுக், தாந்த்ரீக பௌத்த மதத்தின் சாக்யப் பள்ளிகளுக்கு முக்கியமான உரையாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.khandro.net/ritual_offering_light.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணெய்_விளக்கு&oldid=3115497" இலிருந்து மீள்விக்கப்பட்டது