வெண்ணெய் விளக்குத் திருவிழா
சோதுருல் துசென் (Chötrul Düchen) மேலும் சோங்கா சோப்பா அல்லது வெண்ணெய் விளக்கு விழா என்றும் அழைக்கப்படும் இது திபெத்தியப் பண்பாட்டின்படி, கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த நான்கு நிகழ்வுகளை நினைவுகூரும் நான்கு புத்த விழாக்களில் ஒன்றாகும். [1] இவ்விழா திபெத்திய புத்தாண்டு லோசரை நெருக்கமாகப் பின்தொடர்கிறது. இது திபெத்திய நாட்காட்டியில் முதல் பௌர்ணமியின் போது நடைபெறுகிறது. ஆண்டின் முதல் பதினைந்து நாட்கள் புத்தர் தனது சீடர்களுக்காக பக்தியை அதிகரிப்பதற்காக அற்புதங்களைக் காட்டிய பதினைந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. [2] சோதுருல் துசெனின் ("அதிசய வெளிப்பாடுகளின் சிறந்த நாள்") போது, நேர்மறை மற்றும் எதிர்மறை செயல்களின் விளைவுகள் பத்து மில்லியன் மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், திபெத்தியர்கள் பாரம்பரியமாக யாக் வெண்ணெய் கொண்டு வெண்ணெய் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். மேலும், பூக்கள், மரங்கள், பறவைகள் மற்றும் பிற நல்ல சின்னங்களின் வடிவங்களில் விளக்குகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் விளக்குகளுக்காக விரிவான காட்சிகளை உருவாக்குகிறார்கள், சில சமயங்களில் ஒரு கட்டிடம் போன்ற பெரிய கட்டமைப்புகளை எழுப்புகிறார்கள். அனைத்து விளக்குகளும் மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஏற்றிவைத்து விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chötrul Düchen". namgyal.org. Namgyal Monastery. Archived from the original on 2007-10-08.
- ↑ "Celebration of Chotrul Düchen". RIGPA New York. 3 March 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.
- ↑ "Butter Lamp Festival". Tibet Discovery. Archived from the original on 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2021-03-06.