திருமயம் வட்டம்

திருமயம் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருமயம் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் செங்கீரை, கீழானிலை, கோட்டூர் மற்றும் வீரச்சிலை என 4 உள்வட்டங்களும் 81 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

இந்த வருவாய் வட்டத்தில் திருமயம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 158,860 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 79,002 ஆண்களும், 79,858 பெண்களும் உள்ளனர். 39,293 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 94.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 75.17% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16584 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 29,567 மற்றும் 112 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.13%, இசுலாமியர்கள் 2.32%, கிறித்தவர்கள் 3.49% மற்றும் பிறர் 0.06%ஆகவுள்ளனர்.[3]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமயம்_வட்டம்&oldid=2725243" இலிருந்து மீள்விக்கப்பட்டது