திருமயம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந

திருமயம் (ஆங்கிலம்: Thirumayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத் தலைநகரம் ஆகும்.

திருமயம்
திருமயம்
இருப்பிடம்: திருமயம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°14′50″N 78°45′02″E / 10.2471°N 78.750481°E / 10.2471; 78.750481
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி திருமயம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். ரகுபதி (திமுக)

மக்கள் தொகை 8,350 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர்க்காரணம்தொகு

'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச் சொல்லான 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது. இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.[3]

மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்தொகு

இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,

“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே

என பாடியுள்ளார்.

இங்கு ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் பஜனை மடம் உள்ளது.ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமர் பட்டாபிசேகம் கொண்டாடப்படுகிறது.

இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் 1887ல் பிறந்தார்.

 
பாரத மிகு மின் நிறுவனம் திருமயம்

பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவுதொகு

திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன.

காட்சியகம்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. origin of the name (etymology) "THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY)" Check |url= value (உதவி). Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai. October 22, 2012 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

இவற்றையும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமயம்&oldid=3458065" இருந்து மீள்விக்கப்பட்டது