முதன்மை பட்டியைத் திறக்கவும்

அகத்தீஸ்வரம் வட்டம்

அகத்தீஸ்வரம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக அகத்தீஸ்வரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

வருவாய் கிராமங்கள்தொகு

மக்கள்தொகை பரம்பல்தொகு

278.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அகத்தீஸ்வரம் வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,52,175 ஆகும். சராசரி எழுத்தறிவு 83.47% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1027 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,985 மக்கள் வாழ்கின்றனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5.53% மற்றும் 0.17% ஆகவுள்ளனர்.[2]

அரசியல்தொகு

இந்த வட்டத்துக்கு உட்பட்ட சில ஊர்கள் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளன. இந்த வட்டம் முழுவதும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தீஸ்வரம்_வட்டம்&oldid=2721764" இருந்து மீள்விக்கப்பட்டது