பறக்கை

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பறக்கை (ஆங்கில மொழி: Parakkai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

பறக்கை
Parakkai
பறக்கை
பறக்கை Parakkai is located in தமிழ் நாடு
பறக்கை Parakkai
பறக்கை
Parakkai
பறக்கை, கன்னியாகுமரி (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 8°08′09″N 77°27′06″E / 8.135800°N 77.451600°E / 8.135800; 77.451600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
ஏற்றம்
40 m (130 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
629601
தொலைபேசி குறியீடு+914652xxxxxx
வாகனப் பதிவுTN-74 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்நாகர்கோவில், கோட்டாறு, தேரூர், தெங்கம்புதூர் மற்றும் வல்லன் குமாரன் விளை
மாநகராட்சிநாகர்கோவில் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்விஜய் வசந்த்
இணையதளம்https://kanniyakumari.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பறக்கை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°08′09″N 77°27′06″E / 8.135800°N 77.451600°E / 8.135800; 77.451600 (அதாவது, 8°08'08.9"N, 77°27'05.8"E) ஆகும். நாகர்கோவில், கோட்டாறு, தேரூர், தெங்கம்புதூர் மற்றும் வல்லன் குமாரன் விளை ஆகியவை பறக்கை பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான பறக்கை ஏரி இங்கு அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ மற்றும் விவசாய சமூகத்தின், சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக, 2017ஆம் ஆண்டு பறக்கையில் உள்ள மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நிலையான மீன்வளர்ப்பு இயக்குனரகத்துடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி - பறக்கை நிலையான மீன்வளர்ப்பு மையம் எனப் பெயர் மாற்றப்பட்டது.[2] For the cultivation of loaches and to run research centre in Parakkai, necessary steps are underway by the State Government of Tamil Nadu.[3] இங்கிருந்து சுமார் 1.6 கி.மீ. தூரத்தில் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் அமையப் பெற்றுள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுசூதன பெருமாள் கோயில், பறக்கையில் கட்டப்பட்டுள்ளது.[4][5] அக்கரை மகாதேவர் கோயில் இங்குள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும்.[6] இவ்விரு கோயில்களும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. பறக்கை முத்தாரம்மன் கோயில், பறக்கை காளியாளன் என்ற கைலாசநாதர் கோயில், பறக்கை சந்தனமாரியம்மன் கோயில் ஆகியவை இங்குள்ள மற்ற கோயில்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "பொங்கல் 2023: நாகர்கோவில் பறக்கை பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்." Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  2. "Kanyakumari - Parakkai Centre for Sustainable Aquaculture - Home". www.tnjfu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  3. "The delicious Ayirai could become Tamil Nadu's state fish". The News Minute (in ஆங்கிலம்). 2017-11-18. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.
  4. "1000 ஆண்டுகள் பழமையான பறக்கை மதுசூதன பெருமாள் கோயில்". www.dinakaran.com (in ஆங்கிலம்). Archived from the original on 2023-02-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
  5. "Arulmigu Madhusoothana Perumal Temple, Parakkai - 629601, Kanyakumari District [TM038385].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
  6. "Arulmigu Akkarai Mahadevar Temple, Kulakkarai, Parakkai - 629601, Kanyakumari District [TM038386].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-08.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கை&oldid=3714278" இலிருந்து மீள்விக்கப்பட்டது