விருதுநகர் வட்டம்

விருதுநகர் வட்டம் (Virudhunagar Taluk) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக விருதுநகர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் விருதுநகர், வச்சகாராப்பட்டி மற்றும் ஒண்டிப்புலிநாயக்கனூர் என 3 உள்வட்டங்களும், 53 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 251,097 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 125,551 ஆண்களும், 125,546 பெண்களும் உள்ளனர். 68,688 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 40.3% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.27% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25,319 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,617 மற்றும் 151 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.32%, இசுலாமியர்கள் 3.69%, கிறித்தவர்கள் 4.77% மற்றும் பிறர் 0.22% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்".
  2. "விருதுநகர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்" (PDF).
  3. "Virudhunagar Taluka Population, Caste, Religion Data".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருதுநகர்_வட்டம்&oldid=2787945" இலிருந்து மீள்விக்கப்பட்டது