பொன்னமராவதி வட்டம்

பொன்னமராவதி வட்டம் (Ponnamaravathi taluk) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்[1].[2] இந்த வட்டத்தின் தலைமையகமாக பொன்னமராவதி நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் காரையூர், அரசமலை, பொன்னமராவதி என 3 உள்வட்டங்களும் 49 வருவாய் கிராமங்களும் உள்ளன[3]

மக்கள்தொகையியல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 108,479 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 53,788 ஆண்களும், 54,691 பெண்களும் உள்ளனர். 27,104 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 88.3% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.36% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,017 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11444 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,453 மற்றும் 1 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.19%, இசுலாமியர்கள் 4.87%, கிறித்தவர்கள் 0.84% மற்றும் பிறர் 0.03%ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னமராவதி_வட்டம்&oldid=4034746" இலிருந்து மீள்விக்கப்பட்டது