காட்டுமன்னார்கோயில் வட்டம்
காட்டுமன்னார்கோயில் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக காட்டுமன்னார்கோயில் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 123 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வூர் சோழ நாட்டு காவிரி ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள நகரமாகும். [2]
2017-இல் காட்டுமன்னார்கோயில் வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு ஸ்ரீமுஷ்ணம் வட்டம் புதிதாக நிறுவப்பட்டது.
இவ்வட்டத்தில் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் காட்டுமன்னார்கோயில் திருவனந்தீசுவரர் கோயில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 276,947 ஆகும். அதில் 139,188 ஆண்களும், 137,759 பெண்களும் உள்ளனர். 67,752 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 79.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.4% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 990 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29061 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 900 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 99,771 மற்றும் 1,608 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.34%, இசுலாமியர்கள் 10.6%, கிறித்தவர்கள் 6.78%, மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[3]