திருக்கோயிலூர்

திருக்கோவிலூர் மாவட்டம்
(திருக்கோவிலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


திருக்கோவிலூர் (ஆங்கிலம்:Tirukkoyilur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டம் மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

திருக்கோவிலூர்
—  நகராட்சி  —
திருக்கோவிலூர்
இருப்பிடம்: திருக்கோவிலூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E / 11.95; 79.2ஆள்கூறுகள்: 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E / 11.95; 79.2
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டம் திருக்கோவிலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி திருக்கோயிலூர்
சட்டமன்ற உறுப்பினர்

க. பொன்முடி (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

70,212 (2011)

5,856/km2 (15,167/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

11.99 சதுர கிலோமீட்டர்கள் (4.63 sq mi)

73 மீட்டர்கள் (240 ft)

இணையதளம் www.municipalty.in/thirukoilur

இங்கு வீரட்டேஸ்வர் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.

அமைவிடம்தொகு

திருக்கோவிலூர் நகராட்சி அருகில் உள்ள தொடருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ள அரகண்டநல்லூர் ஆகும். இதன் அருகில் கள்ளக்குறிச்சி 46 கிமீ; இதன் கிழக்கில் கடலூர் 70 கிமீ; மேற்கில் திருவண்ணாமலை 40 கிமீ; வடக்கில் விழுப்புரம் 40 கிமீ; தெற்கில் உளுந்தூர்பேட்டை 45 கிமீ தொலைவில் உள்ளது.

நகராட்சி அமைப்புதொகு

11.99 சகிமீ பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 106 தெருக்களையும் கொண்ட நகராட்சி, திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 10,929 வீடுகளும், 70,212 மக்கள்தொகையும் கொண்டது. நகராட்சி எழுத்தறிவு 86.7% மற்றும் பாலின விகிதம் 10,000 ஆண்களுக்கு, 10,007 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 10000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,125 மற்றும் 471 ஆகவுள்ளனர்.[4]

வரலாறுதொகு

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன். கோவலூரில் பாயும் ஆறு பெண்ணை. இந்த ஆற்றுமணலின் அறல் படிவு போல் தலைவியின் கூந்தல் சுருள் படிந்திருந்ததாம்.[5]

கடையெழு வள்ளல்களில் மற்றொருவன் அதியமான் நெடுமான் அஞ்சி. இந்த அஞ்சி கோவலூரைப் போரிட்டு அழித்தான் என்றும், அந்த வெற்றியைப் புலவர் பரணன் சிறப்பித்துப் பாடினான் என்றும் ஔவையார் குறிப்பிடுகிறார்.[6]

திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் போன்றோர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இவ்வாலயம் அந்தகாசூரனை அழித்த தலம் ஆதலால் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சங்ககால மலையமான் நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. ஆதலால் காரி திருக்கோவலூர் மலையமான் காரி என்ற பெயரிலேய அழைக்கப்படுகிறான்.

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E / 11.95; 79.2 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 73 மீட்டர் (239 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கோவில்கள்தொகு

அடிக்குறிப்புதொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. திருக்கோவிலூர் நகராட்சி இணையதளம்
  4. Town Tirukkoyilur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  5. அம்மூவனார் பாடல் அகநானூறு 35-14
  6. புறநானூறு 99-13
  7. "Tirukkoyilur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோயிலூர்&oldid=2913072" இருந்து மீள்விக்கப்பட்டது