மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்
மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம் (Mayiladuthurai Junction railway station, நிலையக் குறியீடு:MV) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ளது ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
மயிலாடுதுறை சந்திப்பு | |
---|---|
தொடருந்து நிலையம் | |
![]() மயிலாடுதுறை சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ரயில்வே குறுக்கு ரோடு, மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 11°05′42″N 79°37′42″E / 11.0951°N 79.6284°E |
ஏற்றம் | 17 மீட்டர்கள் (56 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 8 |
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() |
மற்ற தகவல்கள்n | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | MV[1] |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
இரயில்வே கோட்டம் | திருச்சிராப்பள்ளி |
அமைவிடம் | |
தெற்கு இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், அதே போல் மற்ற மாநிலங்களை இணைக்கும் ஒரு நிலையமாக உள்ளது.
இடம் மற்றும் அமைப்புதொகு
மயிலாடுதுறை தொடருந்து நிலையம் நகரத்தின் தென்-மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் மிக அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது.
மயிலாடுதுறை தொடருந்து நிலையம், மயிலாடுதுறை நகரின் ஒரு மைய புள்ளியாகவும் சென்னை, நாகப்பட்டினம், இராமேசுவரம், கும்பகோணம், தஞ்சாவூர்,திருவாரூர்' மற்றும் பாபநாசம் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் நிலையமாக அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் மீது அமைந்துள்ளது.
குறிப்புகள்தொகு
- ↑ "Mustseeindia". 21 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்தொகு
- Southern Railways - Official Website
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mayiladuthurai