கார்டு லைன், தமிழ்நாடு

கார்டு லைன் அல்லது நேர்வழியானது தமிழ்நாட்டின் விழுப்புரம் சந்திப்பு மற்றும் திருச்சி சந்திப்பு இரண்டையும் இணைக்கிறது. இது சென்னை எழும்பூர் மற்றும் திருச்சியை இணைக்கும் குறுகிய பாதை ஆகும். இந்த ரயில் பாதை முதன்மை வழித்தடத்தினை விட 40 கி. மீ., குறைவானது.

Chord Line
பொதுத் தகவல்
வகைபிராந்திய தொடருந்து
விரைவு தொடருந்து
இலகு தொடருந்து
நிலைஇயக்கத்தில்
வட்டாரம்தமிழ்நாடு
முடிவிடங்கள்விழுப்புரம் சந்திப்பு (VM)
திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ)
நிலையங்கள்29
சேவைகள்1
இணையதளம்www.sr.indianrailways.gov.in
இயக்கம்
திறக்கப்பட்டது1 பெப்ரவரி 1929; 92 ஆண்டுகள் முன்னர் (1929-02-01)
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குவோர்தென்னக இரயில்வே
Depot(s)Golden Rock
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்178 km (111 mi)
தண்டவாள அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்80 km/h (50 mph)
Route number21/21A[1]

வரலாறுதொகு

1927 வரை, விழுப்புரம் சந்திப்பு மற்றும் திருச்சி சந்திப்பு ஆனது முதன்மை வழித்தடம் மூலமே இணைக்கப்பட்டிருந்தன, மேலும் இது கும்பகோணம் மற்றும் மாயவரம் வழியே 240 கிலோமீட்டர்கள் (150 mi) தொலைவு கடந்து சென்றது. எனவே, குறுகிய பாதையின் தேவை எழுந்தது, அதனால் 22 ஆகஸ்ட் 1927ல், ஒரு புதிய ரயில் பாதை கட்டுமானமானது விருத்தாசலம் சந்திப்பு வழியாக பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்த நீட்டிப்பு விழுப்புரம் சந்திப்பு மற்றும் விருத்தாசலம் இடையே நிறைவுசெய்யப்பட்டு, 1 டிசம்பர் 1927ல் திறக்கப்பட்டன, ஸ்ரீரங்கம் - கோல்டன் ராக் நீட்டிப்பு 22 ஆகஸ்ட் 1927முதல், பிச்சையாண்டார்கோவில் - ஸ்ரீரங்கம் நீட்டிப்பு 12 டிசம்பர் 1927 முதல் திறக்கப்பட்டன. மேலும் முழுப்பாதையும் 1 பிப்ரவரி 1929முதல் செயற்படத் தொடங்கியது. இந்த வழித்தடம் மூலம் சென்னை - கொழும்பு பயணக் கால அளவை சுமார் நான்கு மணி நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.[2]

பாதை மாற்றங்கள்தொகு

மீட்டர் கேஜ் பாதை முதல் அகலப்பாதை மாற்றம் 1992-93ல் ஆரம்பிக்கப்பட்டு, செப்டம்பர் 1998ல் நிறைவுப்பெற்றது.[3]

மின்மயமாக்கல்தொகு

2010ல் மின்மயமாக்கல் நிறைவுபெற்றது.[4]

இந்த வழித்தடம் மிகஅதிகமான போக்குவரத்தினை கொண்டுள்ளது[5] மேலும் இது சுமார் 30 பயணிகள் மற்றும் 56 எக்ஸ்பிரஸ் ரயில்கள்களை, குறிப்பாக இரவின்பொழுது கூடுதலாக சரக்கு ரயில்களையும் தினமும் கையாளுகிறது.[6][7][8]

தென் தமிழ்நாடு செல்லும் பல ரயில்கள் கார்டு வழித்தடம் வழியே சென்றபோதும், திருச்சி மற்றும் விழுப்புரம் இடையே 'A' தர நிலையங்கள் கிடையாது.

சரக்கு சேவைகள்தொகு

இந்த வழித்தடத்தில் எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன.[9] அவை மத்திய பட்டறை (Golden Rock), திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூரிலுள்ள சிமெண்ட் மற்றும் ஜிப்சம் தொழிற்சாலைகள்,[10][11][12] மற்றும் விழுப்புரம் மற்றும் விருதாச்சலத்திலுள்ள சர்க்கரை தொழிற்சாலைகள்.[13] இவையாவும் தங்கள்அருகிலுள்ள ரயில் நிலையங்கள், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தினை பயன்படுத்துகின்றன.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

 1. "Trains at a Glance July 2013 - June 2014". Indian Railways. பார்த்த நாள் 1 January 2014.
 2. R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. பார்த்த நாள் 1 January 2014.
 3. "Works And Contract Management". Comptroller and Auditor General of India. மூல முகவரியிலிருந்து 1 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 January 2014.
 4. "Electrification work from Villupuram to Tiruchi completed: E. Ahamed". தி இந்து. 12 January 2010. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article79540.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
 5. R.Rajaram (15 May 2013). "Dindigul-Villupuram project set to cross another milestone". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/dindigulvillupuram-project-set-to-cross-another-milestone/article4717520.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
 6. R.Rajaram (10 July 2010). "Tiruchi-Chennai line to get decongested". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchichennai-line-to-get-decongested/article4901303.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
 7. "Doubling work on 25-km stretch completed in Trichy division". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 May 2013. http://articles.timesofindia.indiatimes.com/2013-05-16/madurai/39309354_1_trichy-division-doubling-work-railway-line. பார்த்த நாள்: 1 January 2014. 
 8. "Kallakudi Palanganatham-Ariyalur railway line nearing completion". தி இந்து. 16 August 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kallakudi-palanganathamariyalur-railway-line-nearing-completion/article5027784.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
 9. "Southern Railway - Tiruchchirappalli Division" (PDF). Southern Railway zone. பார்த்த நாள் 1 January 2014.
 10. "Analysis of alternatives" (PDF). Tamil Nadu Road Sector Project. பார்த்த நாள் 1 January 2014.
 11. "Proposed Karaikal-Peralam line to boost freight traffic". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/proposed-karaikalperalam-line-to-boost-freight-traffic/article2733666.ece. பார்த்த நாள்: 1 January 2014. 
 12. "Karaikal scores high on rail connectivity". தி இந்து. பார்த்த நாள் 1 January 2014.
 13. Gazetteer of South India. https://books.google.com/books?id=vERnljM1uiEC&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 1 January 2014.